KidsOut World Stories

மூன்று குட்டிப் பன்றிகள்    
Previous page
Next page

மூன்று குட்டிப் பன்றிகள்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

மூன்று குட்டிப் பன்றிகள்

 

 

 

 

 

 

  

 

 

பெண் பன்றி மிக களைப்பாக இருந்தது. அது தனது மூன்று குட்டிப் பன்றிகளிடம், 'அன்பானவர்களே, இனிமேல் என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது. நீங்கள் இனிமேல் வீட்டை விட்டு வெளியேறி வெளியே உள்ள உலகில் உங்களுக்கான சொந்த வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்' என்று கூறி விட்டது.

அதில் முதலாவது குட்டிப் பன்றி, வைக்கோல் கட்டைச் சுமந்து செல்லும் ஒரு மனிதரைச் சந்தித்தது.

அந்த முதலாவது குட்டிப் பன்றி அவரிடம் பணிவாகக் கேட்டது, 'ஒரு வீடு கட்டிக் கொள்ளும் வகையில் தயவுசெய்து உங்கள் வைக்கோலை சிறிது எனக்கு விற்க முடியுமா?'

அந்த மனிதர் உடனே சம்மதித்து விட்டார். அந்த முதலாவது குட்டிப் பன்றியும் தனது வீட்டைக் கட்டுவதற்காக ஒரு நல்ல இடம் தேடிச் சென்றது.

மற்றொரு குட்டிப் பன்றி சாலை வழியே சென்று கொண்டிருந்தது. அது குச்சிகள் கொண்ட ஒரு கட்டினைச் சுமந்து கொண்டு செல்லும் ஒரு மனிதரைக் கண்டது.

அந்த குட்டிப் பன்றி அவரிடம் பணிவாக கேட்டது, 'ஒரு வீடு கட்டிக் கொள்ளும் வகையில் தயவுசெய்து சில குச்சிகளை நீங்கள் எனக்கு விற்க முடியுமா?'

அந்த மனிதர் உடனே சம்மதித்து விட்டார் மற்றும் அந்த குட்டிப் பன்றி தனது சகோதரனிடம் போய் வருகிறேன் என்று கூறி விட்டு, சென்று விட்டது.

மூன்றாவது குட்டிப் பன்றி அவர்களது யோசனைகள் பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை:

'நான் ஒரு பெரிய, சிறந்த, வலிமையான வீட்டைக் கட்டப் போகிறேன்' என்று அது யோசித்தது. சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதன் செங்கல்களை ஏற்றிய ஒரு வண்டியை இழுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தது.

மூன்றாவது குட்டிப் பன்றி தன் தாய் தனக்கு கற்பித்தது போன்று அந்த மனிதனிடம் பணிவாக பேசியது. 'நான் ஒரு வீடு கட்டிக் கொள்ளும் வகையில் சிறிது செங்கற்களை நீங்கள் எனக்கு விற்க முடியுமா?' என்று கேட்டது.

அந்த மனிதனும், 'நிச்சயமாக' என்றான். 'இந்த செங்கற்களை எங்கே இறக்கி வைக்க வேண்டும்' என்று அவன் கேட்டான்.

மூன்றாவது குட்டிப் பன்றி சுற்றிலும் பார்த்தது. ஒரு மரத்தின் அடியில் தரை நல்ல அளவில் அமைந்திருந்தது.

'அங்கே தான்' என்று அது கை காட்டியது.

அந்த குட்டிப் பன்றிகள் மூவரும் வேலை செய்யத் தொடங்கின. இரவு நெருங்கும் பொழுது வைக்கோல் வீடு மற்றும் குச்சிகளால் ஆன வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் செங்கற்களால் ஆன வீடு அப்பொழுது தான் தரைக்கு மேலே சிறிது உயரம் எழும்பி இருந்தது. முதலாவது மற்றும் இரண்டாவது குட்டிப் பன்றிகள் சிரித்துக் கொண்டன. அவர்களோ தங்களது வேலையை முடித்து விட்டார்கள். ஆனால் அவர்களது சகோதரனோ முட்டாள் தனமாக கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டன.

 

 

 

இருப்பினும், ஒரு சில நாட்கள் கழித்து அந்த செங்கற்களால் ஆன வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அது பளபளப்பான ஜன்னல்களுடனும், ஒரு அழகிய சிறு புகைபோக்கியுடனும், கதவைத் தட்டுவதற்கான வளையம் பளிச்சென மின்னும் வகையிலும் அந்த வீடு மிடுக்கான தோற்றம் கொண்டிருந்தது.

நட்சத்திரங்கள் ஜொலித்திடும் ஒரு நாள் இரவில் அவர்கள் தங்களது வீடுகளில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த பொழுது ஒரு ஓநாய் இரை தேடி அந்த பகுதிக்கு வந்தது. அந்த ஓநாய் நிலா வெளிச்சத்தில், அந்த சிறிய முதல் குட்டிப் பன்றியின் வைக்கோல் வீட்டை உளவு பார்த்தது. வீட்டுக் கதவின் ஓரமாக நின்று கொண்டு பேசியது:

'குட்டிப் பன்றியே, குட்டிப் பன்றியே என்னை உள்ளே விடு' என்று அந்த ஓநாய் தந்திரமாக பேசியது.

அந்த சிறிய முதல் பன்றியும், 'மாட்டேன், மாட்டேன், என்ன ஆனாலும் சரி உள்ளே விட மாட்டேன்!' என்று பதிலளித்தது.

'அப்படியானால் நான் கோபத்தில் உறுமுவேன், உன் வீட்டை ஊதித் தள்ளி விடுவேன்' என்று அந்த ஓநாய் பயம் காட்டியது. அதன் உடல் மிகப் பெரியது, மோசமான பேராசை கொண்ட பார்வையுடன் இருந்தது.

 

 

பின்னர் அந்த ஓநாய் கோபத்தில் உறுமியது மற்றும் அந்த வைக்கோல் வீட்டை ஊதித் தள்ளியது. ஆனால் அந்த குட்டிப் பன்றி தப்பித்து தனது குட்டிக் கால்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி தனது இரண்டாவது சகோரனின் வீட்டிற்குள் ஒளியச் சென்று விட்டது.

அடுத்த நாள் இரவு அந்த ஓநாய் இன்னும் அதிக பசியுடன் இருந்தது. அப்பொழுது குச்சிகளால் கட்டப்பட்ட அந்த வீட்டைப் பார்த்தது. அந்த வீட்டு வாசல் வரை ஊர்ந்து சென்று பேசியது:

'குட்டிப் பன்றியே, குட்டிப் பன்றியே என்னை உள்ளே விடு' என்று அந்த ஓநாய் தந்திரமாக பேசியது.

அந்த இரண்டாவது குட்டிப் பன்றியும், 'மாட்டேன், மாட்டேன், என்ன ஆனாலும் சரி உள்ளே விட மாட்டேன்!' என்று பதிலளித்தது. முதல் குட்டிப் பன்றி ஏணிப்படிகளுக்கு அடியில் பயத்தில் நடுங்கிக் கொண்டு ஒளிந்து கொண்டு இருந்தது.

'அப்படியானால் நான் கோபத்தில் உறுமுவேன், உன் வீட்டை ஊதித் தள்ளி விடுவேன்' என்று அந்த ஓநாய் பயம் காட்டியது…

 

 

பின்னர் அந்த ஓநாய் கோபத்தில் உறுமியது மற்றும் அந்த குச்சிகளால் ஆன வீட்டை ஊதித் தள்ளியது. ஆனால் அந்த குட்டிப் பன்றிகளோ தப்பித்து தங்களது குட்டிக் கால்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி தங்களது மூன்றாவது சகோரனின் வீட்டிற்குள் ஒளியச் சென்று விட்டன.

'நான் முன்பே உங்களிடம் கூறியிருந்தேன் அல்லவா?' என்று அந்த மூன்றாவது குட்டிப் பன்றி அவர்களை வரவேற்றது. 'வீடுகளை முறையாக கட்டுவது மிக முக்கியமாகும்' என்றது. ஆனால் அவர்களை உள்ளே வரவேற்ற பிறகு, அவர்கள் அனைவரும் அந்த இரவு முழுவதும் அங்கேயே பாதுகாப்பாக தங்கிக் கொண்டனர்.

அதற்கடுத்த நாள் இரவு அந்த ஓநாய்க்கு அகோரப் பசியாக இருந்தது. முன்பைக் காட்டிலும் அதிக பெரியதாக, கொடிய மிருகமாக தோற்றம் அளித்தது.

சுற்றிலும் அலைந்து திரிந்து அந்த மூன்றாவது குட்டிப் பன்றியின் வீட்டிற்கு வந்தது. அந்த வீட்டு வாசல் வரை ஊர்ந்து சென்று பேசியது:

'குட்டிப் பன்றியே, குட்டிப் பன்றியே என்னை உள்ளே விடு' என்று அந்த ஓநாய் தந்திரமாக பேசியது.

அந்த மூன்றாவது குட்டிப் பன்றியும், 'மாட்டேன், மாட்டேன், என்ன ஆனாலும் சரி உள்ளே விட மாட்டேன்!' என்று பதிலளித்தது. முதல் குட்டிப் பன்றியும் இரண்டாவது குட்டிப் பன்றியும் ஏணிப்படிகளுக்கு அடியில் பயத்தில் நடுங்கிக் கொண்டு ஒளிந்து கொண்டு இருந்தன.

'அப்படியானால் நான் கோபத்தில் உறுமுவேன், உன் வீட்டை ஊதித் தள்ளி விடுவேன்' என்று அந்த ஓநாய் பயம் காட்டியது.

 

 

 

பின்னர் அந்த ஓநாய் கோபத்தில் உறுமியது மற்றும் அந்த வீடை ஊதித் தள்ளிப் பார்த்தது. ஆனால் எதுவும் நேரவில்லை. எனவே அந்த ஓநாய் மீண்டும் மீண்டும் உறுமியும் ஊதித் தள்ளியும் கடினமாக முயற்சி செய்து பார்த்தது, ஆனாலும் கூட இன்னும் எதுவும் நடக்கவில்லை. அந்த செங்கற்களால் ஆன வீடு உறுதியாக நின்றது.

அந்த ஓநாய்க்கு மிகவும் கோபமாக இருந்தது. அதனால் முன்பைக் காட்டிலும் அதிக பெரியதாக, கொடிய மிருகமாக தோற்றம் அளித்தது.

'உங்கள் அனைவரையும் கொன்று தின்னப் போகிறேன்' என்று அந்த ஓநாய் உறுமியது. பொறுத்துப் பாருங்கள், 'உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்' என்று பயம் காட்டியது.

அந்த வீட்டைச் சுற்றி கள்ளத்தனமாக நுழைவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தது. ஜன்னல் வழியாக அந்த ஓநாயின் பெரிய கண்கள் உற்று நோக்குவதைக் கண்டு அந்த மூன்று குட்டிப் பன்றிகளும் நடுங்கி அலறின. அப்பொழுது அவை நகங்களால் பிராண்டும் ஒரு ஒலியை அவை கேட்டன.

Wolf climbing down chimney

 

 

அந்த மூன்றாவது குட்டிப் பன்றி, ‘வேகம், வேகம்!’ என்றது. ‘அந்த ஓநாய் மரத்தின் மீது ஏறிக் கொண்டிருக்கிறது. அது நமது வீட்டின் புகைபோக்கிக் குழாயின் வழியாக இறங்கப் போகிறது என்று நான் நினைக்கிறேன்’ என்றது.

அந்த மூன்று குட்டிப் பன்றிகளும் தங்களிடம் இருந்த மிகப்பெரிய பானையில் நீரை நிரப்பி, அதை அடுப்பின் மீது வைத்து கொதிக்க வைத்தார்கள். அந்த சமயத்தில் அந்த ஓநாய் மரத்தின் மீது ஏறி அங்கிருந்து அவர்களது வீட்டுக் கூரையின் ஓரமாக நடந்து வரும் சப்தத்தைக் கேட்க முடிந்தது.

அந்த மூன்று குட்டிப் பன்றிகளும் பயத்தில் தங்களது மூச்சை அடக்கிக் கொண்டன. அருகில் மற்றும் மிக அருகில் அந்த ஓநாய் நெருங்கி விட்டது. ஒரு பெருத்த ஓசையுடன், அந்த பானைக்குள் இருந்த கொதிக்கும் நீருக்குள் ஓநாய் குதித்து விட்டது.

அந்த ஓநாய் உடல் வெந்து, ‘ஐயோ’ என்று வீறிட்டு அலறியது. திரும்பவும் புகைபோக்கிக் குழாய் வழியாக வெளியே பாய்ந்து சென்று மறைந்து விட்டது. அது தனது வால் தீப்பிடித்து விட்டது என்று பயந்தே போய் விட்டது.

 

 

அந்த மூன்று குட்டிப் பன்றிகளும் அந்த பெரிய, மோசமான ஓநாயைக் கடைசியாக பார்த்த பொழுது, மரத்தின் உச்சியில் இருந்து அந்த ஓநாய் தனது வெந்து போன வாலைப் பிடித்துக் கொண்டு கீழே குதித்து ஓடிப் போய் விட்டது.

அதன் பிறகு அந்த மூன்று குட்டிப் பன்றிகளும், செங்கற்களாலும் புத்திக்கூர்மையுடனும் கட்டப்பட்ட தங்களது வீட்டில் மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் வாழ்ந்தன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Enjoyed this story?
Find out more here