*
எறும்புகளுக்கு காதுகளோ அல்லது மூக்கோ கிடையாது மற்றும் அவற்றுக்கு வாய் இருந்தாலும் கூட அவற்றால் பேச முடியாது. அதற்குப் பதிலாக அவற்றின் தலை மீது ஆன்டென்னே என்று அழைக்கப்படும் இரண்டு நீண்ட உணர் கொம்புகள் உள்ளன. இந்த உணர் கொம்புகள் அற்புதமான சிறிய கருவிகள் ஆகும். இவை எறும்பின் அன்றாட வாழ்வில் மிக முக்கியமானவை. எறும்புகள் அவற்றை மணங்களை நுகர்ந்து அறிவதற்கும் நிலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை உணர்வதற்கும் மற்றும் மற்றவர்களுடன் தகவல் தொடர்புக்கும் பயன்படுத்துகின்றன.
எறும்புகள் அநேகமாக உறங்குவதே இல்லை. அதற்குப் பதிலாக அவை சிறிய ‘குட்டித் தூக்கம்’ போட்டுக் கொள்கின்றன, அவை ஒரு நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ளும்.
இந்த சிறிய ஓய்வுகளே ஆல்ஃப்ரெடோவுக்கு அந்த நாளின் மிகச்சிறந்த தருணங்களாக இருந்து வந்தன. இந்த குட்டித் தூக்கங்களின் பொழுது தான் அவன் வேலையைப் பற்றிக் கவலைப்படாமல், உடலுக்கு பதட்டம் இல்லாத ஓய்வு கிடைப்பதாக உணர்ந்தான்.
ஆல்ஃப்ரெடோவுக்கு எட்டு வருடங்கள் வயது ஆகிறது. துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் எட்டு வருடங்கள், நான்கு மாதங்கள் மற்றும் 13 நாட்கள் வயது ஆகிறது. ஆனால் எட்டு வருடங்கள், நான்கு மாதங்கள் மற்றும் 13 நாட்கள் வயது என்பது உங்களுக்கும் எனக்கும் இளம் வயதாகத் தோன்றினாலும், ஆல்ஃப்ரெடோ என்பது ஒரு மத்திம-வயது எறும்பு ஆகும். ‘மத்திம-வயது’ என்பதன் பொருள் ஆல்ஃப்ரெடோ தனது பாதி வாழ்க்கையைக் கடந்து விட்டது என்று பொருளாகும்.
ஆல்ஃப்ரெடோ என்பது ஒரு பின்பற்றும் எறும்பு ஆகும். அந்த எறும்புக்கூட்டில் ஏறக்குறைய அனைவரும் பின்தொடரும் எறும்பு தான். எனவே அது, தான் மற்றபடி எந்த விதத்திலும் சிறப்பானவன் என உணர்ந்தது கிடையாது.
எறும்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒவ்வொறு எறும்புக்கூட்டிலும் ஒரு ராணி எறும்பு உள்ளது. மற்றும் உணவு தேடும் எறும்புகள் (ஃபைன்டர் ஏன்ட்ஸ்) மற்றும் பின்தொடரும் எறும்புகள் என்ற வகையும் உள்ளன.
உணவு தேடும் எறும்புகள் பல்வேறு உணவுகளைத் தேடி கண்டுபிடிக்கின்றன. அவை தங்களது பாதையில் ஒரு மிக வலிமையான மற்றும் சக்தி வாய்ந்த மணத்தை அந்த வழித்தடங்களில் இட்டுச் செல்கின்றன. பின்தொடரும் எறும்புகள் அந்த உணவைக் கொண்டு வருவதற்காக தங்களது உணர்கொம்புகள் மூலமாக அந்த வழித்தடங்களைப் பின்தொடர்ந்து செல்கின்றன. அங்கே என்ன உணவு கிடைக்கிறதோ அந்த உணவை அவை அப்படியே தங்களது கூட்டிற்கு கொண்டு வந்து விடுகின்றன.
உணவு தேடும் எறும்புகள் உணவைச் சேகரிப்பதற்காக அலைந்து திரியும் பொழுது எந்த உணவைக் கண்டு பிடிப்போம் என்பதை அவை ஒருபொழுதும் அறிவதில்லை. உணவின் அளவு, எடை மற்றும் இருக்கும் இடம் ஆகியவை முற்றிலும் தற்செயல் தான். இதன் பொருள் என்ன என்றால், ஆல்ஃப்ரெடோ என்னும் அந்த எறும்புக்கு வெகு தூரம் நடப்பது தேவையாகிறது. வழக்கமாக ஒரு நாளில் சுமார் 5,000 மீட்டர்கள். அதாவது ஒரு மனிதன் மூன்று மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஓடும் தொலைவு-அதுவும் ஒவ்வொரு நாளும் ஓட வேண்டும்!
ஆல்ஃப்ரெடோவின் கூட்டில், உணவு தேடும் எறும்புகள் மிகவும் பிரபலமாக இருந்தன.. அவற்றின் பெரும் புகழ் காரணமாக பின்தொடரும் எறும்புகள் அவற்றைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பின. உணவு தேடும் எறும்புகள் சிறப்பு கவனிப்பு பெற்றன. அதிக நேரம் ஓய்வெடுக்கவும் சாப்பிடுவதற்கு சிறப்பான உணவும் அனுமதிக்கப்பட்டன. இந்த கூடுதல் உணவினால் அந்த உணவு தேடும் எறும்புகள் பெரிதாக வளர்ந்து விட்டன மற்றும் பின்தொடரும் எறும்புகளை விட வலிமையாகி விட்டன. சில நேரங்களில் இது மோசமாகி விட்டது, ஏன் என்றால் இது உணவு தேடும் எறும்புகளை உச்ச அளவில் அதிகாரம் செலுத்தும் எறும்புகளாக ஆக்கி விட்டன. அடிக்கடி அவை தங்களை மற்ற எவரைக் காட்டிலும் சிறப்பானவராகவும் விரும்பிய எதையும் செய்யலாம் என்றும் நினைத்துக் கொண்டன.
இருந்தாலும், மிகப்பெரிய சாறு நிரம்பிய உணவுத் துண்டுகளைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்று ஆல்ஃப்ரெடோ விரும்பியது. யாராலும் அல்லது எதனாலும் தொடப்படாத ஒரு பழுத்த, தடிமனான சிவந்த ஆப்பிளைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்று கனவு கண்டது. அந்த ஆப்பிளில் தனது தாடைகளைப் பதிப்பது போலவும் வயிறு வெடிக்கப் போகும் அளவிற்கு வயிறு நிரம்பிய பிறகே சாப்பிடுவதை நிறுத்துவதாகவும் அது கனவு கண்டது.
ஆப்பிள்கள் தான் ஆல்ஃப்ரெடோவுக்கு பிடித்தமான உணவு. அவை சாறு நிறைந்து, மொறு மொறுப்பாக, சுவையாக மற்றும் இனிப்பு நிறைந்தும் இருப்பதை விரும்பியது. ஆப்பிள்களைச் சாப்பிடுவது எப்பொழுதுமே அதற்கு ஒரு கூடுதல் சக்தியை அளித்தது.
ஆல்ஃப்ரெடோ நிறைய பகல் கனவு கண்டது. அந்த எறும்புக்கூட்டிலேயே மிகவும் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற உணவு கண்டுபிடிப்பாளராகத் திகழ வேண்டும் என்று பகல் கனவு கண்டது. வாயில் உமிழ்நீரை வரவழைக்கும் வகையில் மிகச் சுவையான ஆப்பிள்கள் ஐந்து அல்லது ஆறினை ஒரே பெரிய கடியில் விழுங்கி விடக் கூடிய வகையில் தனது தாடை 20 மடங்கு பெரிதாக இருக்க வேண்டும் என்று அது கனவு கண்டது. அந்த எண்ணமே அதன் முகத்தை புன்னகையில் அகல விரியச் செய்தது. இந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் பெரிதும் விரும்பத் தொடங்கி, இன்னும் நிறைய பகல் கனவு காணும் வகையில் ஓய்வு நேரம் கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டது.
ஒரு நாள் அவனது குட்டித் தூக்க வேளையில், ஆல்ஃப்ரெடோவுக்கு ஒரு பகல் கனவு வந்தது. அது அதன் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றியது. அது உண்மையிலேயே மந்திரம் போன்றது, ஆனால் அச்சுறுத்தும் யோசனை ஆக இருந்தது.
ஆல்ஃப்ரெடோவுக்கு, அந்த எறும்புக்கூடு தான் உலகம். அது உயிருடன் இருந்த இந்த எட்டு வருடங்கள், நான்கு மாதங்கள் மற்றும் 13 நாட்கள் அனைத்திலும் அவனுக்குத் தெரிந்த ஒரே வாழ்க்கை இது தான். ஆனால் திடீரென்று ஆல்ஃப்ரெடோவுக்கு ஒரு முக்கியமான உண்மை உதித்தது.
‘எனது சிறிய உலகத்தில் நிகழ்வது பற்றியே நான் கவனம் செலுத்திக் கொண்டு இருந்து விட்டேன்’ என்று அது சிந்தித்தது. ‘என்னைச் சுற்றிலும் மீதமிருக்கும் பிற உலகம் பற்றி முழுமையாக மறந்து விட்டேனே என்று யோசித்தது.’
ஆல்ஃப்ரெடோவின் முழு வாழ்க்கையும் பிற எறும்புகளை சந்தோஷமாக வயிறு நிரம்பி இருக்க வைப்பதையே நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. பின் தொடரும் எறும்புகள் தங்களது முதுகில் சுமந்து எறும்புக்கூட்டுக்கு கொண்டு வருகின்ற உணவுகளை ராணியும் உணவு தேடும் எறும்புகளும் நன்கு உண்டு களித்து தங்களது வயிறுகளை நிரப்பிக் கொள்கின்றன, ஆனால் ஆல்ஃப்ரெடோவுக்கோ சிறு சிறு துண்டுகளே கிடைத்து வந்திருக்கின்றன.
இந்த வழியில் தான் நடக்க வேண்டும் என்று யார் கூறினார்கள், என்று ஆல்ஃப்ரெடோ ஆழ்ந்து சிந்தித்தது. ‘மிகப் பெரிய, மொறு மொறுப்பான, சாறு மிக்க ஆப்பிளை நான் கண்டுபிடிக்க விரும்பினால், ஏன் அதை நான்….. இப்பொழுதே செய்யக் கூடாது?’
அதன்து வாழ்க்கையிலேயே, தனது மகிழ்ச்சியே முதலில் வர வேண்டும் என்று உணரத் தொடங்கியது அப்பொழுது தான். தனது வாழ்நாளில் பாதி அளவை அது கடந்து விட்டது. இப்பொழுதும் அது செயல்படா விட்டால், பரிதாபகரத்துடனும் சலிப்புடனும் தனது காலத்தை வீணடித்து வருவதாகத் தான் பொருள். ஆல்ஃப்ரெடோ தனது கூட்டை விட்டு வெளியேறி தனது கனவைப் பின்தொடர்வது என தீர்மானித்து விட்டது.
ஆல்ஃப்ரெடோ உற்சாகம் கொப்பளிக்க, வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல ஆர்வத்துடன் தனது சாகசப் பயணத்தை தொடங்கி விட்டது. வேலைக்குச் செல்வது போல தனது கூட்டின் வாசலை விட்டு வெளியேறியது. ஒரு உணவுத் தடத்தைப் பின் தொடர்வதற்குப் பதிலாக, ஆல்ஃப்ரெடோ தனது பாதையை மாற்றிக் கொண்டது. ஒரு உணவு தேடும் எறும்பு போல் இல்லாமல், தனக்குப் பின்னால் ஒரு வழித்தடத்தை அது விட்டுச் செல்லவில்லை.
எனக்கு கண்டிப்பாக பித்து தான் பிடித்து விட்டது என்று ஆல்ஃப்ரெடோ நினைத்துக் கொண்டது. திரும்பியும் பார்க்காமல் தொலைவில் உள்ள மரக்கூட்டங்களை நோக்கி நடை போட்டது. மகிழ்ச்சியைத் தேடிச் செல்வது மட்டுமே வாழ்க்கையை மதிப்புக்கு உரியதாக ஆக்கும் என்ற உண்மையை ஆல்ஃப்ரெடோ இப்பொழுது புரிந்து கொண்டது.
Enjoyed this story?