ஒரு அடர்ந்த காட்டில் குரங்குகளின் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அந்த குரங்குகளின் ராஜா மிகவும் புத்திசாலியாகும். ஒரு நாள் அது தனது கூட்டத்தினரை வரவழைத்தது.
‘எனது அன்புக்குரிய குரங்குகளே, இந்த அழகான காட்டில் குடியிருப்பதற்கு நாம் அதிர்ஷ்டசாலிகள் தான், ஆனால் எச்சரிக்கையாக இருங்கள்! இந்த மரங்களும் செடிகள் பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கலாம், ஆனால் அவை விஷத்தன்மை கொண்ட பழங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த குளங்கள் தெளிவான மற்றும் வண்ணமிக்க நீரைக் கொண்டிருக்கலாம் ஆனால் அங்கே ஒரு பேய் குடியிருக்கிறது. எனவே என்னிடம் முதலில் கேட்காமல், எதையும் சாப்பிடாதீர்கள் அல்லது எதையும் அருந்தாதீர்கள்!’ என்றது.
அடுத்த நாள் அவற்றில் ஒரு குரங்குக்கு தாகம் எடுத்தது. அதற்கு ராஜா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. எனவே ராஜாவிடம் பேச விரும்பியது.
‘கவலைப்படாதே குழந்தை’ என அந்த ராஜா அறிவித்தது. ‘நான் அந்த குளம் பாதுகாப்பானது தானா என்று சோதனை செய்து பார்க்கிறேன்’ என்றது.
அது அந்த குளத்தை நெருங்கிய பொழுது, பெரிய காலடித் தடங்கள் உள்ளே இறங்கிச் செல்வதையும் ஆனால் அவை வெளியே வராமலும் இருப்பதைக் கவனித்தது. எனவே பேய் அங்கே தான் ஒளிந்து கொண்டிருப்பதாக அந்த ராஜா முடிவு செய்து கொண்டது. குரங்குகள் அனைத்தும் அழத் தொடங்கின, இனி எவ்வாறு தண்ணீர் குடிப்பது என கவலைப்பட்டன. அந்த ராஜா அவர்களை சமாதானப்படுத்தி விட்டு, அந்த பேயை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்தது.
அந்த பேய் சிரித்தது. ‘நீங்கள் ஒரு பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள், குரங்கு ராஜா! உங்கள் குரங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக இந்த குளத்திற்கு வந்தால் நான் அவர்களைச் சாப்பிட்டு விடுவேன். அவர்கள் இங்கே வரா விட்டால், அவர்கள் தண்ணீர் குடிக்க முடியாமல் தாகத்தினாலேயே இறந்து விடுவார்கள்!’ என்றது.
குரங்கு ராஜா யோசித்துப் பார்த்தது, ‘நான் கட்டாயம் ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க வேண்டும்.’
குரங்கு ராஜா தனது குரங்குகளிடம் மூங்கில் துண்டுகளைச் சேகரித்து வருமாறு கூறியது. உள்ளீடற்ற அந்த மூங்கில் குச்சிகளை ஒன்றாகச் சேர்த்து, ஒரு பெரிய மூங்கில் குழாய் ஆக மாற்றி அதைக் கொண்டு குளத்தில் இருந்த நீரை உறிஞ்சியது. குரங்குகள் தங்களுக்கு வேண்டிய அளவுக்கு தண்ணீரை அருந்தின.
குரங்கு ராஜாவை அனைத்து குரங்குகளும் பாராட்டின.
குரங்கு ராஜாவால் பேய் ஏமாற்றப்பட்டு விட்டது. அந்த பேய் மீண்டும் அந்த குளத்திற்குள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்று விட்டது!
எனவே பிரச்னைகள் மோசம் அடையும் பொழுது ஒரு பொழுதும் மனதைத் தளர விட்டு விடக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். இந்த புத்திசாலித்தனமான குரங்கு ராஜா போன்று வெற்றி அடைய வேண்டும்!
Enjoyed this story?