ஒரு காலத்தில் நகரத்தில் ஒரு சிறிய எலி இருந்தது. ஒரு நாள் நகரத்து எலி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய நண்பனான கிராமத்து எலியைப் பார்க்கச் சென்றது.
இரண்டு எலிகளும் சிறந்த நண்பர்கள். ஒன்றாக சேர்ந்து இருப்பது இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
கிராமத்து எலி எளிமையானது. ஆனால் தாராள குணம் கொண்டது. அது தன் நண்பனுக்கு ரொட்டி, வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் அவரைக்காய் போன்ற சில உணவுகளைக் கொடுத்தது.
ஆனாலும், நகரத்து எலி உணவுகளை சாப்பிடத் தொடங்கிய பின், அதற்கு சிறிது உடல்நிலை சரியில்லாமல் போனது.
உனக்குப் பசிக்கவில்லையா?’ என்று கிராமத்து எலி கேட்டது.
‘மிகவும் பசிக்கிறது. ஆனால், இந்த உணவு நகரத்து உணவு போல இல்லை. எனக்கு இது பிடிக்கவில்லை’ என்று நகரத்து எலி சொன்னது.
இரண்டு எலிகளும் அந்த நாளை ஒன்றாகக் கழித்தன. அவர்கள் இருவரும் கிராமத்தைச் சுற்றித் திரிந்து மகிழ்ச்சியாக இருந்தனர். இரவு வரும் வேளையில், இரண்டும் பிரிந்து சென்றன.
நகரத்து எலி வீட்டிற்குச் செல்வதற்கு முன், வியக்கத்தக்க சுவையான உணவை உண்பதற்கு கிராமத்து எலியை நகரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்தது.
அடுத்த வாரத்தில், கிராமத்து எலி நகரத்திற்கு செல்லும் வழியில் ஓடியது. தன் நண்பனை கண்டுபிடித்தது.
‘நகரத்தில் நாங்கள் மாலை ஆறு மணி வரை சாப்பிட மாட்டோம்’ என்று நகரத்து எலி சொன்னது. ‘மாலை வரை காத்திரு. உணவு எவ்வளவு சுவை என்று உனக்கு தெரியும். அது காத்திருப்பதற்கு தகுதியானது.’
மாலை வந்தது. சூரியன் மறைந்தது. நகரத்து எலி ஒரு பெரிய மனிதனின் வீட்டில் உள்ள தன்னுடைய சிறிய வளையை கிராமத்து எலிக்கு காட்டியது.
மனிதர்கள் தங்கள் இரவு உணவு மேஜையில் ஒரு சிறிய எலி கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு இனிப்பு, இறைச்சி மற்றும் பாலடைக்கட்டி ஆகியவற்றை நிரப்பி இருந்தனர். அது சொர்க்கம் போல இருந்தது!
எலிகள் கேக்குகள், இறைச்சிகள் மற்றும் பல்வேறு பாலாடைக்கட்டிகளை விழுங்கத் தொடங்கின. கிராமத்து எலிக்கு உப்பிட்ட பன்றி இறைச்சி மற்றும் சலாமி மிகவும் பிடிக்கும் என்பதால் கிராமத்து எலி அதனை விழுங்கியது.
எலிகள் உணவைச் சாப்பிட்டு முடிக்கும் போது, அவை இரண்டுக்கும் குரைக்கும் சத்தம் கேட்டது.
‘அது என்ன?’ கிராமத்து எலி அலறியது. அந்த உரத்த சத்தத்தைக் கேட்டு பயந்தது.
‘ஐயோ! அது காவல் நாய்! ஓடு!’ நகரத்து எலி கத்தியது.
அவை இரண்டும் வேகமாக ஓடி தப்பிக்க முயற்சித்தன. கிராமத்து எலி நகரத்து எலியை பின்தொடர்ந்து எலி வளைக்கு சென்றது.
மிகவும் நெருங்கி வந்து விட்டது. நாய் அவர்களைப் பிடித்திருக்கும்.
‘மன்னித்து விடு நகரத்து எலி. நான் இப்போது வீட்டிற்கு செல்கிறேன். போய் வருகிறேன்!’ கிராமத்து எலிக்கு மூச்சிரைத்தது.
‘ஏன்? இன்னும் சுவையான உணவு நீ சாப்பிட வேண்டாமா?’ என்று நகரத்து எலி கேட்டது.
‘ஆபத்தான இடத்தில் இனிப்புகள் மற்றும் இறைச்சிகளை சாப்பிடுவதை விட, அமைதியான இடத்தில் ரொட்டி, பாலாடைக்கட்டி மற்றும் அவரைக்காய்கள் சாப்பிடுவதை நான் விரும்புகிறேன்.’ என்று கிராமத்து எலி சொன்னது.
Enjoyed this story?