KidsOut World Stories

விவசாயி கார்மென் Antonio Barroso    
Previous page
Next page

விவசாயி கார்மென்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

 

விவசாயி கார்மென்

 

 

 

 

 

 

 

 

 

*

வடக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த ஒரு 10 வயது சிறுமி தான் கார்மென்.

அவளுடைய பெற்றோர்கள் பண்ணை வைத்திருந்தார்கள். அதில் நல்ல பால் கொடுக்கும் பசுக்கள் இருந்தன. சில சமயம், பசுக்கள் அந்தக் குடும்பம் குடிக்க முடியாத அளவுக்கு நிறைய பால் கொடுக்கும்.

பின்பு, அவர்கள் பக்கத்து வீட்டார்களுக்கு அதனை கொடுப்பார்கள். குறிப்பாக, தேவை அதிகம் உடையவர்களுக்கு கொடுப்பார்கள்.

ஒரு நாள், திருமதி. ஜூலியா அவர்களுக்கு சிறிது பால் எடுத்துச் செல்லுமாறு கார்மெனின் தந்தை கார்மெனிடம் சொன்னார். திருமதி. ஜூலியா கிராமத்தின் மறு புறத்தில் தனியாக வசிக்கும் ஒரு இனிமையான வயதான பெண்மணி.

செல்லும் வழியில், முட்டைகள் வாங்குவதற்கு பணம் வேண்டும் என்பதற்காக பாலை விற்கலாம் என்று கார்மென் சிந்திக்கத் தொடங்கினாள்.

அந்த முட்டைகளின் மூலம் அவளுக்கு கோழிக் குஞ்சுகள் கிடைக்கும். அவை விரைவில் வளர்ந்து நிறைய முட்டைகள் கொடுக்கும்.

பின்பு, அவள் சில கன்றுக் குட்டிகள் மற்றும் ஆட்டுக் குட்டிகள் வாங்குவதற்குத் தேவையான பணம் கிடைக்கும் வரை முட்டைகளை விற்பாள்.

ஒன்றிரண்டு வருடங்களில், கார்மென் தனக்கென ஒரு சொந்த பண்ணையை வைத்திருக்க முடியும்.

பின்பு, மாட்ரிட் பகுதியில் வீடு வாங்குவதற்கும் மற்றும் நிறைய ஆடம்பர ஆடைகள் வாங்குவதற்கும் தேவையான பணம் அவளிடம் இருக்கும்.

கார்மென் சிந்திப்பதில் மிக மும்முரமாக இருந்ததால் வழியில் உள்ள பெரிய கல்லை பார்க்கவில்லை. அவள் அதன் மீது தடுமாறி விழுந்தாள். பால் தூசி நிறைந்த அந்த நிலம் முழுவதும் சிந்தியது.

ஒரு நொடியில், கார்மென் விவசாயி ஆகும் கனவு கலைந்தது. விற்பதற்கு அவளிடம் பால் எதுவும் இல்லை. குஞ்சுகள் பொரிக்கும் முட்டைகளை வாங்க அவளிடம் பணம் இருக்காது. அவளுடைய திட்டங்கள் பாழானது.

கார்மென் தன்னை நினைத்து வருந்தினாள். அவள் அழத் தொடங்கினாள்.

நிலத்தில் உள்ள கற்களை கவனித்திருக்கலாம் என்று வீட்டிற்கு செல்லும் வழியில் கார்மென் நினைத்தாள். அவளுடைய திட்டங்களைப் பற்றி மும்முரமாக சிந்தித்திருக்கக் கூடாது.

நம் இலக்குகளை அடைய நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், நம் வழியில் நாம் காணும் விஷயங்களை வெற்றிகரமாக கடந்து செல்வது தான் என்பதை கார்மென் கற்றுக்கொண்டாள்.

Enjoyed this story?
Find out more here