அனன்சிக்கு ஏன் எட்டு மெலிந்த கால்கள் உள்ளன?
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:
ஒரு அகன் கதை

*
ஒரு காலத்தில், அனன்சி என்ற ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அனன்சியின் மனைவி மிகவும் நல்ல சமையல் செய்த போதிலும், பேராசை கொண்ட சிலந்தி மற்றவர்களின் உணவை ருசிப்பதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை.
ஒரு நாள், அனன்சி தனது நண்பன் முயலைப் பார்க்கச் சென்றது.
சமையல் அறைக்குள் நுழைந்ததும் பேராசை கொண்ட சிலந்தி, ‘‘ம்ம்! முயலே, நீ சமைக்கும் இவை மிகவும் அழகான பச்சை உணவுகள்! .’ என்று ஆர்ப்பரித்தது.
‘நீ ஏன் இரவு உணவுக்கு இங்கு இருக்கக்கூடாது?’ என்று முயல் கேட்டது. ‘பச்சை உணவுகள் இன்னும் சமைத்து முடிக்கவில்லை, ஆனால், அவை விரைவில் தயாராகிவிடும்.’ என்றது முயல்.
உணவு சமைக்கும் போது அங்கு இருந்தால், முயல் நிச்சயமாக தனக்கு வேலைகளைக் கொடுக்கும் என்று அனன்சிக்கு தெரியும். மேலும், பேராசை கொண்ட சிலந்தி வேலைகளைச் செய்வதற்காக தனது நண்பனைப் பார்க்க வரவில்லை.
ஆகையால், அனன்சி முயலிடம், ‘தயவுசெய்து என்னை மன்னித்து விடு நண்பா. எனக்கு சில வேலைகள் உள்ளன. நான் அதை உடனடியாகச் செய்ய வேண்டும். நான் ஏன் ஒரு நீளமான வலையின் ஒரு முனையை என் காலில் கட்டி, மறு முனையை உன் சமையல் பானையிலும் கட்டக்கூடாது? பிறகு, பச்சை உணவுகள் தயார் ஆனதும் நீ அந்த வலையை இழுக்கலாம். அப்போது, நான் இரவு உணவிற்கு ஓடி வருவேன்’ என்று சொன்னது.
இது மிகவும் நல்ல யோசனை என்று முயல் ஒப்புக்கொண்டது. அதனால், அனன்சியின் வலையை தன் பானையில் கட்டிவிட்டு, தன் நண்பனை கை அசைத்து அனுப்பியது.

சிறிது நேரம் கழித்து, பேராசை கொண்ட சிலந்தி தனது நல்ல நண்பனான குரங்கின் வீட்டைக் கடந்து சென்றது. குரங்கும் தனது இரவு உணவை தயாரித்துக் கொண்டிருந்தது.
சமையல் அறைக்குள் நுழைந்த பேராசை கொண்ட சிலந்தி, ‘ம்ம்! குரங்கே, அது நீ சமைக்கும் அவரைக்காய் மற்றும் தேனால் ஆன அருமையான உணவு’ என்று ஆர்ப்பரித்தது.
நீ ஏன் அது தயாராகும் வரை காத்திருந்து இரவு உணவுக்கு இங்கு இருக்கக்கூடாது? என்று நண்பனான குரங்கு சொன்னது.
மீண்டும், உணவு சமைக்கும் போது அங்கு இருந்தால், குரங்கு நிச்சயமாக தனக்கு வேலைகளை கொடுக்கும் என்று அனன்சிக்குத் தெரியும். மேலும், பேராசை கொண்ட சிலந்திக்கு வேலைகளைச் செய்ய விருப்பமில்லை. எனவே, அனன்சி குரங்கிடம், ‘தயவுசெய்து என்னை மன்னித்து விடு நண்பா. எனக்கு சில வேலைகள் உள்ளன. நான் அதை உடனடியாகச் செய்ய வேண்டும். நான் ஏன் ஒரு நீளமான வலையின் ஒரு முனையை என் காலில் கட்டி, மறு முனையை உன் சமையல் பானையிலும் கட்டக்கூடாது?’ என்று கேட்டது.
பிறகு, அவரைக்காயும் தேனும் தயார் ஆனதும் நீ அந்த வலையை இழுக்கலாம். அப்போது, நான் இரவு உணவிற்கு ஓடி வருவேன்’ என்று சொன்னது.
இது ஒரு அருமையான யோசனை என்று குரங்கும் ஒப்புக்கொண்டது. அதனால், அனன்சியின் வலையை தன் பானையில் கட்டிவிட்டு, தன் நண்பனை கை அசைத்து அனுப்பியது.
*
அனன்சி வீடு செல்லும் வழியில், மேலும் ஆறு நண்பர்களை சந்தித்தது. அனைவருமே இரவு உணவு தயார் செய்வதில் மிகவும் மும்முரமாக இருந்தார்கள்.

அது ஆமை, முயல், அணில், எலி, நரி ஆகியவற்றைப் சந்தித்தது. கடைசியாக, தனது நல்ல நண்பரான பன்றியைச் சந்தித்தது.
ஒவ்வொருவரை சந்தித்த போதும், அனன்சி அதே கதையைச் சொன்னது. ஒவ்வொரு நண்பரின் சமையல் பானையிலும் ஒவ்வொரு வலையைச் சுழற்றிக் கட்டியது.
அதனால், அனன்சியின் எட்டு கால்களும் நீளமான வலைகளால் வெவ்வேறு சமையல் பாத்திரங்களுடன் கட்டப்பட்டிருந்தன .

பேராசை பிடித்த சிலந்தி தனது ஒவ்வொரு நண்பரையும் ஏமாற்றாமல் இருக்க முடியவில்லை. எந்த வேலையும் செய்யாமல் ஒவ்வொரு பானையிலிருந்தும் சாப்பிட முடியும் என்று நினைத்தது.
அனன்சி அனைத்து உணவுகளையும் சாப்பிட ஆர்வமாக இருந்தது. குறிப்பாக, எப்போதும் சுவையாக சமைக்கப்படும் பன்றியின் இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் தேன் உணவை சாப்பிடுவதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
‘நான் இந்த முறை சிறப்பாக சமாளித்தேன்’ என்று பேராசை கொண்ட சிலந்தி நினைத்தது. ‘எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட இவ்வளவு அருமையான உணவு கிடைத்துள்ளது. எந்தப் பானை உணவு முதலில் தயாராக இருக்கும் என்று எனக்கு யோசனையாக உள்ளது?’
*
அப்போது, அனன்சிக்கு தனது காலில் உள்ள ஒரு நீளமான வலையை யாரோ இழுப்பது போல தோன்றியது. ‘அது சுவையான பச்சை நிற உணவுகளைச் செய்த முயலாக இருக்கலாம்’ என்று பேராசை கொண்ட சிலந்தி நினைத்தது.
ஆனால், அப்போது அனன்சியின் மற்றொரு காலில் மற்றொரு நீளமான வலையும் இழுக்கப்பட்டது. ‘ஹையா!’ என்று மகிழ்ச்சியில் கத்தியது. ‘அது அவரை மற்றும் தேன் பானை கொண்ட குரங்காக இருக்கலாம்’ என்றது.
பின்னர், மற்றொரு காலும் இழுக்கப்பட்டது! இன்னொன்று! இன்னொன்று! ஒரே நேரத்தில் அனன்சியின் எட்டு கால்களும் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்பட்டது.

அனன்சி ஆற்றை நோக்கி இழுக்கப்பட்டது. பின்பு, அதனுடைய வலைகள் அனைத்தும் அதனுடைய கால்களிலிருந்து போக வேண்டும் என்பதற்காக தண்ணீரில் குதித்தது. வலைகள் ஒவ்வொன்றாக அதன் கால்களில் இருந்து விடுபட்ட பிறகு, அந்த பேராசை கொண்ட சிலந்தி ஆற்றங்கரையில் ஏறியது.
அனன்சி வெளியில் வந்து தன்னை உலர்த்திக் கொண்ட போது மிகவும் விசித்திரமான ஒன்றைக் கவனித்தது.
அதனுடைய எட்டு கால்களும் நீட்டப்பட்டிருந்தன.
அவை முன்பு குட்டையாகவும் அகலமாகவும் இருந்தன. இப்போது, அவை மெல்லியதாகவும் நீளமாகவும் இருந்தன.
‘ஓ, நான் எப்படி இவ்வளவு பேராசை கொண்டவனாக இருந்திருக்க முடியும்?’ என்று அனன்சி நினைத்தது. ‘இப்போது எனக்கு என்ன ஆனது என்று பாருங்கள். எனக்கு எட்டு மெலிந்த கால்கள் உள்ளன. அது மட்டுமல்ல, இப்போது என் இரவு உணவையும் நானே சமைக்க வேண்டும்.’
அதனால் தான் அனன்சிக்கு எட்டு மெலிந்த கால்கள் உள்ளன.
Enjoyed this story?