KidsOut World Stories

கூழாங்கல் சூப் Anam Peeram    
Previous page
Next page

கூழாங்கல் சூப்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

கூழாங்கல் சூப்

a pot of soup

 

 

 

 

 

 

வெகு காலத்திற்கு முன்பாக, ஒரு கிராமம் சிறு ஓடைக்கு பக்கத்தில் அமைந்திருந்தது. அந்த நேரத்தில் கனிவான மனம் படைத்த ஒரு படை வீரன் அந்த தூசு படிந்த பாதையில் கஷ்டப்பட்டு நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த நாள் முழுவதும் அவன் நடந்து வந்திருந்த காரணத்தால் அவனது நடை மெதுவாகவே இருந்தது. அந்த படை வீரனுக்கு இப்பொழுது தேவை எல்லாம் ஒரு இனிய, சூடான சாப்பாடு தான். அந்த சாலையோரத்தில் இருந்த ஒரு சிறிய விசித்திரமான வீட்டைக் கண்டு அவன் தனக்குத்தானே நினைத்துக் கொண்டான், ‘இந்த வீட்டில் வசிப்பவரிடம் நிச்சயம் சிறிதளவாவது உணவு மீதம் இருக்கும், அதைக் கொண்டு என்னைப் போன்ற பசி மிக்க பயணி பசியாறிக் கொள்ளலாம். நாம் சென்று கேட்டுப் பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டான்.

அந்த படை வீரனும் கற்களால் ஆன பாதை மீது நடந்து வீட்டின் மரக்கதவை நோக்கிச் சென்றான். வழியில் உள்ள தோட்டத்தில் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் காரட் போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டு இருந்தன. அந்த வீட்டை அவன் நெருங்கியதும் அதன் கதவைத் தட்டுவதற்காக தன் கையை உயர்த்தினான். அப்பொழுது அந்த கதவு திடீரென்று திறந்தது. வீட்டின் உட்புறம் ஒரு முதிய வயது மனிதர் நின்றிருந்தார். அவரது கைகள் அவரது இடுப்பு மீது இருந்தன. அவர் அவனை முகச்சுளிப்போடு கடுமையாகப் பார்த்தார். 

அந்த முதியவர் அவனிடம், ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கோபமாகக் கேட்டார். ஆனாலும் கூட அந்த படை வீரன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

‘ஐயா, நான் ஒரு படை வீரன். இந்த கிராமத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து தான் வருகிறேன். எனக்குத் தரும் அளவில் ஏதேனும் உணவு உங்களிடம் மீதமாக இருக்கிறதா என்று கேட்பதற்காகவே இங்கு வந்தேன்' என்றான்.’

அந்த முதியவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவர் அவனிடம் சற்றும் கனிவில்லாமல் முகத்தில் அறைவது போல், ‘உணவு எல்லாம் இல்லை. இப்பொழுதே போய் விடு’ என்றார்.

அந்த படை வீரன் அதற்கெல்லாம் அசரவில்லை. அவன் மீண்டும் புன்னகை செய்தான். தனது தலையை ஆட்டிக் கொண்டான். ‘பாருங்க, எனது கூழாங்கல் சூப்புக்குள் போடுவதற்காக சில சேர்மானப் பொருட்களைத் தான் நான் கேட்கிறேன். எதையும் போடாமல் தான் இன்று நான் அந்த சூப்பைத் தயாரிக்க வேண்டும் போலிருக்கிறது.  ஆனாலும் அந்த சூப் சுவையாகத் தான் இருக்கும்’ என்றான்.

அந்த முதியவர் வியப்பால் கண்களை உயர்த்தினார்.  என்னது ‘கூழாங்கல் சூப்பா?’ என்று அந்த முதியவர் கேட்டார்.

‘ஆமாம்’ என்று அந்த படை வீரன் பதிலளித்தான். ‘சற்று வழி விடுங்க…’ என்று கூறினான். 

அந்த படை வீரன் பாதையின் நடுவே நடந்து சென்று தனக்குச் சொந்தமான பையில் இருந்து ஒரு இரும்புக் கொப்பரையை எடுத்து வந்தான். அந்த கொப்பரையில் நீரை நிரப்பிய பிறகு அதன் அடியில் தீ மூட்டினான். பிறகு தனது பட்டுப்பையில் இருந்து  சாதாரணமாகத் தோற்றமளிக்கும் ஒரு கூழாங்கல்லை மிகவும் பயபக்தியுடன் எடுத்து அந்த நீருக்குள் மெல்ல போட்டான்.

இதை அனைத்தையும் அந்த முதியவர் ஜன்னல் வழியாக பார்த்தவர் திகைத்துப் போனார். 

‘கூழாங்கல் சூப்பா?’ நம்ப முடியாமல் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். ‘நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது!’ என்று நினைத்துக் கொண்டார்.

சற்று நேரத்தில் அந்த படை வீரன் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு அந்த நீரைக் கிளறுவதைக் கவனித்த பின்னர் அவனருகே நடந்து சென்று கேட்டார், ‘என்ன தான் செய்கிறாய்?’

அந்த படை வீரன் அந்த கொப்பரையில் இருந்து வரும் நீராவியை முகர்ந்து பார்த்தான். பெரும் எதிர்பார்ப்புடன் தனது உதடுகளை நக்கிக் கொண்டான். ‘இந்த சுவையான கூழாங்கல் சூப்பைக் காட்டிலும் ருசியாக இருப்பது வேறு எதுவும் கிடையாது. அந்த படை வீரன் முதியவரைப் பார்த்தவாறு கேட்டான், 'இந்த கூழாங்கல் சூப்பில் சிறிது உப்பும் மிளகும் போட்டால் ருசியில் இதை எதுவும் அடித்துக் கொள்ள முடியாது’.

தயங்கியவாறே அந்த முதியவர் வீட்டின் உள்ளே சென்று சற்று நேரத்தில் சிறிது உப்பையும் மிளகையும் எடுத்து வந்து படை வீரனிடம் ஒப்படைத்தார்.

அவற்றை அந்த கொப்பரைக்குள் தெளித்த அந்த படைவீரன், ‘இது தான் மிகச் சரியான பக்குவம்!’ என்று கத்தினான். அதை இன்னும் ஒரு முறை கிளறியவன் முதியவரை நிமிர்ந்து பார்த்தவாறு பேசினான், ‘ஆனால் உங்களுக்கே தெரியும், ஒரு முறை இந்த கூழாங்கல் சூப்பினை முட்டைகோஸ் உடன் சுவை பார்த்திருக்கிறேன்’.

அதைக் கேட்டு அந்த முதியவர் தன் தோட்டத்தில் இருந்த முட்டைகோஸ் செடியில் இருந்து நன்கு முதிர்ந்த ஒன்றை எடுத்து அந்த படைவீரனிடம் தந்தார்.

படைவீரனும் வியப்புடன் அதை பெற்றுக் கொண்டு, ‘அற்புதமாகத் தோற்றம் அளிக்கிறது’ என்று கூறி விட்டு, அந்த முட்டைக் கோஸினை துண்டு துண்டாக வெட்டி அந்த கொப்பரைக்குள் போட்டான்.

அந்த கொப்பரையை நன்கு முகர்ந்து பார்த்த படைவீரன் அந்த முதியவரிடம், ‘உங்களுக்கே தெரியும், இந்த சூப்பில் சிறிது காரட் போட்டால் ராஜாவுக்கே விருந்து பரிமாறலாம்’ என்றான்.

அந்த முதியவர் சிந்தித்தவாறே, ‘சரி காரட் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்’ என்று கூறி விட்டு காரட் செடிகள் பக்கம் போய் கை நிறைய காரட்களை அள்ளி வந்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட காரட்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த படை வீரன், அவற்றையும் துண்டுகளாக்கி கொப்பரைக்குள் இட்டு மீண்டும் கிளறினான்.

இவ்வாறு சமையல் நடந்து கொண்டே இருந்தது. அந்த முதியவர் அந்த கொப்பரையில் இருந்து வெளி வரும் நறுமணத்தை ரசித்த காரணத்தால், வெங்காயம், உருளைக் கிழங்கு, மற்றும் மாட்டு இறைச்சி ஆகிய பொருட்களைக் கொண்டு வந்து தந்தார். படை வீரனும் தனது பையில் இருந்து காளான் மற்றும் பார்லி ஆகியவற்றையும் எடுத்து கொதிக்கும் கொப்பைரைக்குள் இட்டான். சூப் தயாராகி விட்டது என்று அறிவித்தான்.

அந்த சூப்பில் பாதியை அந்த முதியவருக்கு படை வீரன் அளித்த பொழுது, அவரும் புன்னகையுடன் அதை பெற்றுக் கொண்டார்.

முதியவர் படை வீரனை அன்புடன் உள்ளே அழைத்தார், ‘இன்று காலையில் தான் ரொட்டிக் கடைக்குச் சென்று வாங்கிய புது ரொட்டி வைத்திருக்கிறேன். அதை இந்த கூழாங்கல் சூப்பில் நனைத்து சாப்பிடுவோம் வா“ என்றார்.’

இவ்வாறு அந்த முதியவரும் படை வீரனும் ஒரு அற்புதமான உணவை ஒன்றாகப் பகிர்ந்து கொண்டார்கள். படை வீரன் தனது பையில் இருந்து பால் டப்பாவை எடுத்துத் தர அதையும் இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். முதியவரும் தான் சாப்பிட்ட அந்த சூப் தன் வாழ்நாளில் இது வரை சாப்பிட்டதிலேயே மிகவும் சுவையாக இருந்த ஒன்று என்று பாராட்டினார்.

அந்த கூழாங்கல்லை வைத்திருந்த பட்டுப்பையை அந்த வடைவீரன் முதியவரிடம் தரும் வரையில் உண்மையை உணரவில்லை. அந்த ருசியான சூப்பிற்கு காரணம் அந்த கூழாங்கல் அல்ல. இருவரும் ஒன்றிணைந்து, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதால் தான் அந்த அருமையான உணவு உருவானது.

Enjoyed this story?
Find out more here