சூரியனும் சந்திரனும் வானத்திலேயே வசிப்பது ஏன்
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:
ஒரு நைஜீரியக் கதை

*
பல வருடங்களுக்கு முன்பாக, சூரியனும் தண்ணீரும் பெரும் நண்பர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் இருவரும் இந்த பூமியில் ஒன்றாக வசித்தார்கள். சூரியன் அடிக்கடி தண்ணீரைச் சென்று பார்க்கும் தன்மை கொண்டது, ஆனால் தண்ணீர் ஒரு பொழுதும் இங்கே வருகை தருவதில்லை.
கடைசியில் சூரியன் தண்ணீரிடம் நீ ஏன் இங்கே ஒரு பொழுதும் வருகை தருவதில்லை என்று கேட்டது. அதற்கு தண்ணீர் பதிலளித்தது. சூரியனின் வீடு போதிய அளவில் பெரிதாக இல்லை. தனது மக்கள் அனைவருடன் தான் இங்கே வருகை தந்தால், தான் சூரியனை அதன் வீட்டில் இருந்து வெளியே தள்ளி விடும் என்றது.
தண்ணீர் பின்னர் கூறியது, 'உன் வீட்டிற்கு நான் வருகை தருவதை நீ விரும்பினால், ஒரு பெரிய வீட்டை நீ அமைக்க வேண்டியிருக்கும். அந்த வீடு மிகப் பெரிய வீடாக இருக்க வேண்டும் என்பதை நான் உனக்கு இப்பொழுதே எச்சரிக்கை தருகிறேன். ஏன் என்றால் எனக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிறையப் பேர் உள்ளனர் அதனால் எனக்கு மிகப்பெரிய இடம் வேண்டும்.' என்றது.
சூரியனும் ஒரு பெரிய வீட்டைக் கட்டுவதாக உறுதி அளித்தது. சூரியன் தனது வீட்டிற்குச் சென்றதும் அதன் மனைவி சந்திரன், சூரியனை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்றாள்.
சூரியன் தனது மனைவி சந்திரனிடம் தான் தண்ணீருக்கு அளித்துள்ள உறுதி மொழி பற்றி கூறியது. அடுத்த நாள் அவர்கள் ஒரு பெரிய வீட்டைக் கட்டத் தொடங்கினர். தண்ணீரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் போதிய இடம் இருக்கும் வகையில் கட்டினர். அது கட்டி முடிந்த பிறகு, சூரியன் தண்ணீரிடம் வருகை தரும்படி கேட்டுக் கொண்டது.
தண்ணீர் வருகை தரும் பொழுது சூரியனை அழைத்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நுழையும் வகையில் பாதுகாப்பானதாக இருக்குமா என்று கேட்டது, சூரியனும் அதற்கு, 'ஆம், நீங்கள் அனைவரும் தாராளமாக உள்ளே வரலாம்' என்று பதிலளித்தது.
தண்ணீர் பாயத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து மீன்கள் மற்றும் பிற நீர் வாழ் விலங்குகள் அனைத்தும் வரத் தொடங்கின.
மிக விரைவில் தண்ணீர் அந்த வீட்டில் முழங்கால் அளவுக்கு வந்து விட்டது. அப்பொழுதும் தண்ணீர் சூரியனிடம் வீடு இப்பொழுதும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று கேட்டது. 'ஆம், தயவுசெய்து எனது வீட்டிற்குள் வாருங்கள்' என்றது. எனவே தண்ணீரும் அதன் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
தண்ணீரின் அளவு ஒரு மனிதனின் கழுத்தளவுக்கு வந்த பொழுது, தண்ணீர் சூரியனிடம் 'எனது மக்கள் மேலும் உள்ளே வருவதை நீ விரும்புகிறாயா?' என்று கேட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல், சூரியனும் சந்திரனும், 'ஆம், நிறையப் பேர் வந்தால் தான் மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றனர்.
எனவே மேலும் மேலும் தண்ணீரின் மக்கள் வரத் தொடங்கி, சூரியனும் சந்திரனும் வீட்டின் கூரையின் மீது அமரும்படி நேரிட்டது. தண்ணீர் அந்த கூரையின் உச்சி மீது வழிந்தோடிய பொழுது, சூரியனும் சந்திரனும் வானத்திற்கு செல்லும்படி தள்ளப்பட்டு விட்டனர்….
…..அதில் இருந்து அவர்கள் அங்கேயே இருக்கத் தொடங்கி விட்டார்கள்.
Enjoyed this story?