
ஒரு பழமையான ஆங்கிலக் கதை
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, லாக்ஸ்லியைச் சேர்ந்த ராபர்ட் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பர்கள் அவனை ராபின் என அழைத்தார்கள்.
ராபின் அவனது அம்மாவுடன் லாக்ஸ்லி மாளிகையில் வசித்து வந்தான். ஆனால், அவனது அப்பா ஒரு ராணுவ வீரர். அவர் வெளிநாடுகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ராஜா, ரிச்சர்ட் தி லயன்ஹார்ட் ஒரு எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது.
மன்னர் வெளிநாடுகளில் போரில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது தம்பியை இங்கிலாந்தை ஆட்சி செய்ய விட்டுச் சென்றார். ரிச்சர்டின் சகோதரர் பெயர் ஜான். ஆனால், அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல. உண்மையில் அவர் மிகவும் பேராசை கொண்டவர். ஜான் ரிச்சர்டை விட அதிக நிலங்களையும், அதிக மாளிகைகளையும் வைத்திருக்க விரும்பினார். எனவே, ராபினின் தந்தையைப் போல இருக்கும் நில உரிமையாளர்கள் ராஜாவுடன் வெளிநாட்டில் இருந்தபோது, பேராசை கொண்ட இளவரசர் ஜான் அவர்களின் நிலங்களையும் மாளிகைகளையும் அவர்களின் மாளிகைகளையும் திருடினார்.
ஒரு நாள், இளவரசர் ஜான் லாக்ஸ்லி மாளிகையைத் திருட அவரது ஆட்களை அனுப்பினார். ராபின், அவரது அம்மா மற்றும் அவர்களது அனைத்து வேலை ஆட்களும் எப்படியோத் தப்பித்தார்கள். ராபின் அவனது அம்மாவை அவர்களது சொந்த பெற்றோருடன் பாதுகாப்பாக வாழ்வதற்குக் கூட்டிச் சென்றார்.
அவரது தந்தையின் வீடு மற்றும் நிலம் திருடப்பட்டதால் ராபின் மிகவும் கோபமாக இருந்தார். எனவே, பேராசை கொண்ட மனிதர்களிடம் இருந்து அவரது சொத்துக்களைத் திரும்பப் பெறுவேன் என்று சபதம் செய்தார். அருகிலேயே வசித்து வந்த அவரது அன்புக்குரிய மரியனை விட்டுச் செல்வது அவருக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், அவர் நாட்டிங்ஹாம் அருகே தலைமறைவாகி ஷெர்வுட் காட்டில் வசித்து வந்தார்.
மற்ற ஆண்களும் ராபினுடன் சேர வந்தனர். விரைவில், நண்பர்கள் குழு ஒன்றாக ஒளிந்து கொண்டார்கள். அவர்கள் மெர்ரி மென் என்று அழைக்கப்பட்டார்கள். மேலும், அவர்கள் காட்டின் பச்சை இலைகளுக்கு இடையில் மறைந்து கொள்ள பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள்.
ராபினின் நண்பர் வில் தவிர மற்றவர்கள் அனைவரும் பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர் மட்டும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவர் மறைந்திருக்கும் போது இலையுதிர் கால இலை போல இருந்தது. அவரது சிவப்பு ஆடைகள் காரணமாக ராபின் அவரை 'வில் ஸ்கார்லெட்' என்று அழைத்தார். அவரது ஜாக்கெட்டின் பின்புறத்தில் ஒரு ஹூட் இருந்ததால் வில், ராபினை 'ராபின் ஹூட்' என்று அழைத்தார்.
ராபினுடன் இணைந்த அனைத்து ஆண்களும் சிறப்பாக வில் எய்பவர்கள் - அவர்கள் ஒரு அம்பை நேராக எய்து, தொலைதூரத்தில் இருக்கும் இலக்கைச் சரியாக நடுவில் எய்தும் திறமைக் கொண்டவர்கள்.
இளவரசர் ஜானின் பேராசை கொண்ட வேலை ஆட்களில் ஒருவர் ஷெர்வுட் காட்டைக் கடந்து செல்லும் போது, ராபின் ஹூட் மற்றும் அவரது மெர்ரி மென் குழு மறைவிலிருந்து வெளியே வந்து அந்த மனிதனைப் பிடிப்பார்கள்.
‘எங்களோடு சாப்பிட வா' என்று அவர்கள் அவனை அழைத்து சுவையான சாப்பாடு கொடுப்பார்கள். சாப்பிட்டவுடன், ராபின் ஹூட் அந்த நபரிடம் சாப்பாட்டுக்கு பணம் கட்டச் சொல்லிக் கேட்பார். பின்பு, ராபினின் ஆட்கள் அந்த நபரிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை எடுத்துக்கொண்டு அவனை மறுபடியும் அனுப்பி விடுவார்கள்
நாட்டிங்ஹாமின் ஷெரிஃப் அவருடைய காட்டில் நடக்கும் திருட்டைக் கேட்டு மிகவும் கோபம் கொண்டார். ஆனால், நன்றாக ஒளிந்திருக்கும் ராபின் ஹூட் மற்றும் அவருடைய மெர்ரி மென் குழுவை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ராபினும் அவரது ஆட்களும் பேராசை கொண்ட மனிதர்களிடமிருந்து சேகரித்த புதையலில் ஒரு ரூபாய் கூட வைத்திருக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் அதை தங்களுக்குத் தெரிந்த அனைத்து ஏழை மக்களுடனும் பகிர்ந்து கொண்டனர் - பேராசை கொண்ட இளவரசர் ஜானும் அவரது ஆட்களும் திருடியபோது எல்லாவற்றையும் இழந்த மக்களிடம் கொடுத்தார்கள்.
காலம் செல்லச் செல்ல, மற்ற ஆண்களும் ராபின் ஹூட்டுடன் சேர்ந்து நீதிக்காகப் போராட விரும்பினார்கள். அவர்களில் ஒருவர் ஜான் லிட்டில். அவர் இரண்டு மீட்டருக்கும் சற்று உயரமானவர், நீண்ட கம்பத்துடன் அற்புதமாகச் சண்டையிடக் கூடியவர்.
'நீ மிகவும் உயரமாக இருப்பதால் உன் பெயர் ஜான் பிக் என்று இருக்க வேண்டும்' என்று சொல்லி சிரித்தார் ராபின் ஹூட். 'நான் உன்னை நகைச்சுவையாக லிட்டில் ஜான் என்று கூப்பிடுவேன்!' மற்ற அனைவரும் அவரை லிட்டில் ஜான் என்றும் அழைத்தார்கள்.
மெர்ரி மென் குழுவில் சேர்ந்த மற்றொரு நபர் ஆலன் ஏ'டேல். அவர் ஒரு பாடகர். எனவே, அவர் ராபினையும் அவரது ஆட்களையும் மகிழ்விக்க அவரது இசையை வாசித்து பாடினார்.
ஒரு நாள் ஃபிரியர் டக் என்ற துறவி லாக்ஸ்லியின் ராபினைத் தேடி ஷெர்வுட் காட்டிற்கு வந்தார். அவருடன் ஒரு இளம் பெண் இருந்தார்.
'மரியன்!' என்று ராபின் அவர்களைப் பார்த்ததும் சந்தோசத்தில் கத்தினார்.
ஃபிரியர் டக் விளக்கினார்:
‘மரியனின் தந்தை அவரது மகளை ஒரு பணக்கார முதியவருக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார். ஆனால், மரியன் கண்ணீர் விட்டு அழுது, அவள் வேறொருவரை நேசித்ததால் இந்த மனிதனை திருமணம் செய்ய முடியாது என்று சொன்னார். அவளுடைய உண்மையான காதல் லாக்ஸ்லியின் ராபின். ராபின் ஷெர்வுட் காட்டில் ஒளிந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். அதனால், நான் மரியனைக் காப்பாற்றி அவளுடைய உண்மையானக் காதலை திருமணம் செய்வதற்காக அவளை இங்கு அழைத்து வந்தேன்.
மரியனும் ராபினும் மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்தனர். ஃபிரியர் டக்கும், மரியனும் மெர்ரி மென் உடன் இணைந்தார்கள்.
ஐயோ, ஒரு நாள் ராபின் ஹூட்டுக்கு பயங்கரமான செய்தி வந்தது:
‘ரிச்சர்ட் மன்னர் தொலைதூர நாட்டில் பிடிபட்டார். தங்கங்கள் மற்றும் வெள்ளிகளைக் கொடுத்தால் மட்டுமே ராஜாவைப் பிடித்து வைத்திருப்பவர்கள் அவரை விடுதலை செய்வார்கள்' என்று தூதர் சொன்னார். ‘ஆனால், இளவரசர் ஜான் அவரது சகோதரனின் உயிரைக் காப்பாற்ற ஒரு வெண்கல காசு கூட கொடுக்க மாட்டேன் என்றும், அவரது சகோதரனின் விடுதலைக்காக தங்கம் அல்லது வெள்ளியை நிச்சயமாகக் கொடுக்க மாட்டேன் என்றும் அறிவித்தார்.'
‘அவர் இங்கிலாந்தின் ராஜாவாக விரும்புவதால் இவ்வாறு சொன்னார்!’ என்று ராபின் ஹூட் வெறுப்புடன் கூச்சலிட்டார்.
மெர்ரி மென்னுக்கு ஒரு சிறந்த யோசனை வந்தது. ‘நமக்குத் தெரிந்த அனைத்து ஏழை மக்களுக்குத் தேவையான அனைத்திற்கும் போதுமான பணம் கொடுத்துவிட்டோம். எனவே, நம் புதையல் பெட்டியில் இன்னும் இருக்கும் பணம் மன்னர் ரிச்சர்ட்டை விடுவிக்க உதவும்.’
எனவே, இளவரசர் ஜானுக்குத் தங்கள் திட்டத்தைச் சொல்லாமல், ராபினும் அவரது ஆட்களும் தங்கத்திலும் வெள்ளியிலும் மன்னரை விடுதலை செய்யும் பணத்தைக் கொடுத்தார்கள்.
சில வாரங்களுக்குப் பிறகு, யாருக்கும் தெரியாத ஒரு புதிய மாவீரர் ஷெர்வுட் காட்டுக்குள் சவாரி செய்தார். அவர் கருப்பு நிற உடையணிந்து, ராபின் ஹூட்டைத் தேடுவதாகச் சொன்னார்.
‘நீ யார்?’ என்று ராபின் கேட்டார்.
நான் கருப்பு மாவீரன்’ என்று பதில் சொன்னான்.
ஆனால், அந்த மாவீரர் அவரது தலைக்கவசத்தைக் கழற்றியதும், ராபின் அந்த மனிதனை அடையாளம் கண்டுகொண்டார்.
கிங் ரிச்சர்ட்!’ என்று அவன் மூச்சுத் திணறிக் கொண்டுக் கத்தினான். ராபின் தலைக் குனிந்து ராஜாவை வணங்கினார். மெர்ரி மென்னும் தலைக் குனிந்து வணங்கினார்கள். பணிப்பெண் மரியனும் தலைக் குனிந்து வணங்கினாள்.
‘என்னுடைய விடுதலைக்காக நீங்கள் பணம் கொடுத்தீர்கள். அதற்கு உங்களிடம் நன்றி சொல்ல வந்தேன்' என்று ராஜா கூறினார். ‘என் சகோதரர் ஜான் எப்படி என் ராஜ்யத்தை நியாயமாக ஆளத் தவறிவிட்டார் என்று நான் கேள்விப்பட்டேன். அவரது பேராசைக் குணம் எனக்குத் தெரியும் மற்றும் அவர் மக்களின் நிலங்களையும் வீடுகளையும் திருடினார் என்பதும் எனக்குத் தெரியும். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன் மற்றும் அவனுக்குத் தண்டனையும் கொடுப்பேன். ஆனால், வீடுகளையும் நிலங்களையும் இழந்த உங்கள் அனைவருக்கும், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மீண்டும் அங்கு வாழ அந்த வீடுகளையும் நிலத்தையும் திருப்பித் தருகிறேன்.’
ராபின், மரியன் மற்றும் அனைத்து மெர்ரி மென்களும் நாட்டை ஆளும் ரிச்சர்ட் தி லயன்ஹார்ட் என்று அழைக்கப்பட்ட தங்கள் ராஜாவுக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதியளித்தார்கள்.
ராபினும் அவரது மெர்ரி மென்களும் தங்கள் ராஜாவுக்கு விசுவாசமாக இருந்த கதை பல தலைமுறைகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகும், லாக்ஸ்லி மாளிகை ராபினின் கதையை நாம் இப்படித்தான் தெரிந்து கொண்டோம்.
Enjoyed this story?