KidsOut World Stories

மூன்று முரட்டு செம்மறி ஆடுகள்    
Previous page
Next page

மூன்று முரட்டு செம்மறி ஆடுகள்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

மூன்று முரட்டு செம்மறி ஆடுகள் 

 

 

 

 

 

 

*

முன்னொரு காலத்தில் மூன்று முரட்டுத் தனமான செம்மறி ஆடுகள் ஒரு சமவெளியின் பச்சை வயல் வெளியில் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு ஆட்டின் பெயர்- சின்னச் செம்மறி, இன்னொன்றின் பெயர்- நடுச் செம்மறி, மூன்றாவது ஆட்டின் பெயர்- பெரிய செம்மறி. அவை நல்ல இனிப்பான புல் வகைகளை விரும்பிச் சாப்பிட்டு வந்தன. அவை பேராசைக்கார ஆடுகளாக இருந்ததால், எல்லாப் பச்சைப் புல் வெளியையும் ஒன்றுவிடாமல் கரம்பிக் கரம்பிச் சாப்பிட்டு, இப்போது புல்வெளிகள் எல்லாம் பொட்டல் காடுகளாகவும், தரிசு நிலங்களாகவும் ஆகியிருந்தன.

ஆனால் அவற்றுக்குப் பசி பயங்கரமாக இருந்தது. தூரத்தில் அவை பசுமையான இனிப்பான புல்வெளி இருப்பதைப் பார்த்தன. ஆனால், அங்கு செல்ல ஒரே ஒரு வழி தான் இருந்தது. அதாவது ஒரு ஆழமான அருவிக்கு மேலே இருக்கும் ஒரு ஆபத்தான பாலம் மீது நடந்துதான் அங்கு செல்ல முடியும். இன்னொரு ஆபத்தும் அங்கு இருந்தது. பாலத்துக்கு கீழே டிரேவர் எனப்படும் ஒரு திகிலூட்டும் பயங்கரமான பூதம் வாழ்ந்து வந்தது. அதுவும் எப்போதும் பசியுடனேயே இருந்தது.

அந்தப் பூதத்துக்கு நல்ல குண்டான செம்மறி ஆடென்றால், அதைவிடச் சந்தோஷம் வேறொன்றுமில்லை. சின்னச் செம்மறி தான் முதலில் பாலத்தை அடைந்தது. எச்சரிக்கையுடன் அது தன் ஒரு குளம்பை கவனமாக வைத்து, பிறகு மற்றொரு குளம்பை வைத்து பாலம் மீது நடக்க முயன்றாலும், அது ஆபத்தான வழுக்குப் பாலம் என்பதால், அதன் குளம்பு அந்த மரப் பாலத்தில் வழுக்கிக் கொண்டே போனது.

திடீரென்று ஒரு பெரிய கர்ஜனை வந்தது. ‘யார் என் பாலம் மீது கால் வைத்து அசைப்பது?’ என்று சொன்னபடியே அந்தப் பெரிய பூதம் வெளியே வந்தது.

 

தன் குளம்புகள் நடுங்க, சின்னச் செம்மறி, ‘நான் தான் என்றது. நான் சாப்பிட புல்லைத் தேடிப் போகிறேன்.’

‘அது எனக்குத் தெரியாது! இன்று என் காலை உணவு, மதிய உணவு, தேநீர் எல்லாமே நீதான்! உன்னை இப்போது சாப்பிடப் போகிறேன்!’

‘அடக் கடவுளே! வேண்டாம்!’ பயந்து போய் கத்தியது சின்னச் செம்மறி. ‘நான் வெறும் சின்னச் செம்மறி தான். என் சகோதரன் வரும்வரை நீ ஏன் காத்திருக்க கூடாது? அவன் என்னை விட பெரிதாகவும், மிகவும் சுவையாகவும் இருப்பானே?’

*

எனவே பேராசை கொண்ட பூதம் காத்திருக்க முடிவு செய்தது. சின்னச் செம்மறி பாலத்தைக் கடந்து போய் மறுபுறம் இருக்கும் புதிய பச்சை புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது. மற்ற இரண்டு ஆடுகளும் புதிய பச்சைப் புல்லைச் சாப்பிடும் சின்னச் செம்மறியைப் பார்த்தன. அதன் மீது பொறாமை கொண்டதோடு, அவையும் அங்கு சென்று புல்லை உண்ண விரும்பின. எனவே, நடுச் செம்மறி பாலத்தை நோக்கிப் போய் ஆற்றைக் கடக்க முயன்றது. டக், டிக், டக், டிக் என அதன் குளம்புகள் பாலத்தில் சப்தம் எழுப்பின. மீண்டும் பூதம் பாலத்துக்கு கீழிருந்து வெளியே வந்தது.

‘என் பாலம் மீது யார் பயணம் செய்வது?’ என்று கர்ஜித்தது பூதம்.

தன் குளம்புகள் நடுங்க, நடுச் செம்மறி, ‘நான் தான்’ என்றது. ‘நான் என் சகோதரன் சின்னச் செம்மறியோடு சேர்ந்து இனிப்பு புல் சாப்பிடப் போகிறேன்.’

‘அது எனக்குத் தெரியாது! இன்று என் காலை உணவு, மதிய உணவு, தேநீர் எல்லாமே நீதான்! உன்னை இப்போது சாப்பிடப் போகிறேன்!’

‘கொஞ்சம் பொறுங்கள் பூதமே, நீங்கள் என்னைச் சாப்பிடக்கூடாது. உங்கள் பசியைப் பூர்த்திசெய்யப் போதுமான கறி என் உடம்பில் இல்லை. என் பெரிய அண்ணன் இப்போது இங்கு வரும் வரை காத்திருங்கள் - அவன் என்னை விட குண்டாகவும், சுவையாகவும் இருப்பான்.’

‘ஓ, அப்படியா?’ என்ற பூதம் காத்திருக்க ஆரம்பித்தது. நடுச் செம்மறி பாலம் மீது கவனமாக ஏறிக் கடந்துபோய் மறுபுறம் இருக்கும் புதிய பச்சை புல்லைச் சின்னச் செம்மறியோடு சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தது.

பெரிய செம்மறி பொறாமை அதிகமாகி, அதுவும் பாலத்தைக் கடந்துபோய் சகோதரர்களுடன் சேர்ந்து புல்லை மேய விரும்பியது. எனவே தைரியமாக, அந்தப் பாலம் மீது தன் குளம்புகளை ஒவ்வொன்றாக வைத்து ஏறியது. டக், டிக், டக், டிக். திடீரென்று பூதம் பாலத்துக்கு கீழிருந்து வெளியே வந்தது.

‘என் பாலம் மீது யார் பயணம் செய்வது?’ என்று மிரட்டியது பூதம்.

‘அது நான் தான். நான் பெரிய செம்மறி. நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?’

‘நான் தான் பூதம்! இன்று என் காலை உணவு, மதிய உணவு, தேநீர் எல்லாமே நீதான்! உன்னை இப்போது சாப்பிடப் போகிறேன்!’

‘இல்லை, இல்லை, நீ பூதம் இல்லை!’

‘ஆம். நான் பூதம் தான்- நீ பார்க்க வேண்டுமா?’

பின்னர் பூதம் வெளியே தலைகாட்டிய போது, அந்தப் பூதத்தை தைரியமாக தன் கொம்புகளால் வலுவாக முட்டி ஆற்றுக்குள் தள்ளிவிட்டது பெரிய செம்மறி. ஆடு முட்டிய வேகத்தில் பூதம் வேகமாகத் ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனது. அதன் பிறகு அது அங்கு வரவே இல்லை. அது முதற்கொண்டு, யார் வேண்டுமானாலும் பாலத்தைக் கடந்துபோய், மூன்று முரட்டுச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து இனிப்பு புல்லை உண்டு அனுபவிக்க முடிந்தது.

 

Enjoyed this story?
Find out more here