KidsOut World Stories

அஹர்சி: வங்காளப் புலி Abbey Ledger-Lomas    
Previous page
Next page

அஹர்சி: வங்காளப் புலி

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

அஹர்சி: வங்காளப் புலி

ஒரு வங்காளக் கதை

 

 

 

 

 

*

பெரிய வங்காளப் புலியான அஹர்சி நல்ல அறிவாற்றல் கொண்டவன். அது குளிர்காலம். அவன் இன்னும் அவனுடைய பாதங்களில் இருக்கும் பனிக்கட்டி தரும் குளிர்ச்சிக்கு பழகிக்கொணடிருந்தான். அவன் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தான். சதுப்பு நில மண்ணின் சூடான கசிவை நினைத்துப் பார்த்தான்.

அஹர்சி நிறைய விஷயங்களைத் தொலைத்திருந்தான். சூரியன் அவனது மேலங்கியை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச் செய்வதையும், மதிய வேளையில் சூரிய ஒளி அவனது கருப்பு கோடுகளை கருப்பு மின்னல் போல் காட்டுவதையும், அது மின்னல் வெட்டுவது போல காட்சி அளிப்பதையும் அவன் தொலைத்திருந்தான். மாலை நேர வெப்பத்தில் தூங்குவதையும், காட்டு  கொடிகள் வழியாக வெட்டும் சூரிய ஒளியைப் பார்ப்பதையும் அவன் தொலைத்திருந்தான். மரங்களில் டோயல் பறவைகள் சத்தமிடுவதையோ அல்லது காற்றில் பழுத்த மாம்பழங்களின் வாசனையை மீண்டும் எப்போது உணர முடியும்  என்று அவன் ஏங்கினான். இந்த அழகான, வலி மிகுந்த தருணங்களைத் தான் வங்காளப் புலி தன் மனதில் கற்பனை செய்து பார்க்க முயன்றது. அஹர்சி தன் வீட்டைப் பார்க்க ஏங்கினான்.

அவன் ஒரு பெரிய பெருமூச்சு விட்டபோது, அவன் மீசைகள் முறுக்கின. உறைந்த நிலத்தில் சிதறிக் கொண்டிருந்த நட்சத்திரக் குருவிகள்  சாம்பல் நிற வானத்தில் சிதறிப் பறந்தன .

மூன்று மணி நேரம் கடந்துவிட்டது. அவன் ஆழ்ந்து யோசித்தாலும், புலிக்கு நினைவில் இருந்ததெல்லாம் மாம்பழங்கள் மற்றும் சதுப்பு நிலங்களின் தெளிவற்ற பாதி உருவங்கள் மட்டுமே. தனது பழைய வீட்டைப் பற்றி முழுவதுமாக மறந்துவிடுவோமோ என்று அவன் கவலைப்பட்டான்.

அஹர்சி முதன்முதலில் இங்கிலாந்தில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு அவனது அம்மா மற்றும் அப்பாவுடன் வந்தபோது,  மிகவும் உற்சாகமாக இருந்தான். அவன் அனைத்தையும் நாக்கால் நக்கினான். மரத்திலிருந்து மரத்திற்குத் தாவும்போதோ அல்லது ஒவ்வொரு பூவையும் முகர்ந்து பார்க்கும்போதோ அல்லது ஒவ்வொரு சிறிய பூச்சியையும் தொடும்போதும் அவனது அம்பர் நிற கண்கள் ஆர்வத்தால் பிரகாசித்தன.

'இப்போது அமைதியாக இரு, அஹர்சி' என்று அவன் அம்மா சொல்வாள். 'நீ வெகுதூரம் வந்துவிட்டாய். சுற்றிப் பார்க்க நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நீ ஓய்வெடுக்க வேண்டும்.'

ஆனால், அந்த இளம் புலிக்கு ஓய்வெடுக்கநேரம் இல்லை. சந்திக்க புதிய விலங்குகள், ஏற புதிய மரங்கள் இருந்தன. அவனது புதிய வீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருந்தது. முதல் நாள் சூரியன் மறைவதற்கு முன்பு, அஹர்சி அனைத்து விலங்குகளின் கூண்டுகளையும் சுற்றிச் சுற்றி, கேள்விக் கேட்டான். சொர்க்கப் பறவைகளின் விசித்திரமான கவர்ச்சியான வண்ணங்களைப் பார்த்தான். காண்டாமிருக கொட்டகையில்  இருக்கும் வைக்கோலின் இனிமையான மற்றும் புதிதான வாசனையை நுகர்ந்தான்.

ஆனால், அவன் எவ்வளவு அதிகமாக ஆராய்ந்தானோ, அவ்வளவு அதிகமாக தனது புதிய வீடு தான் வந்த இடத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமானது என்பதை அஹர்சி உணர்ந்தான். இப்போது, அந்த இளம் புலி அவனது சொந்த  ஊரைப்  பற்றிய அனைத்தும் நினைவுகளையும் இழந்துவிட்டதாகக் கவலைப்படுகிறான். அவன் ஒரு வங்காளப் புலியாக இருப்பதை மறந்துவிட்டானோ என்று நினைத்து அவன் கவலைப்பட்டான்.

*

அஹர்சி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அவனது வாலை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கமாக வேண்டுமென்றே ஆட்டினான். ‘நினைவில் கொள். இன்னும் ஆழமாக யோசி’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

நேரம் கடந்துவிட்டது. பகல் மங்கலாகி, மற்ற விலங்குகள் இரவு வேளையில் அமர ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு, யாரோ தன்னைப் பார்ப்பது போல அஹர்சிக்கு தோன்றியது. அவன் ஒரு கண்ணைத் திறந்தான். முடிந்தவரை கவனம் செலுத்தி, அது யார் என்று நியாபகப்படுத்த முயற்சி செய்தான். அது சோடி, ஒரு சிறுத்தை.

'நீ என்ன செய்கிறாய்?' ஆழமான, சீறிய குரல் வந்தது.

'நான் நியாபகப்படுத்துகிறேன்' என்று அஹர்சி பதில் சொன்னது. 'இப்போது உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால்...' அஹர்சி மீண்டும் ஒரு முறை கண்ணை மூடிக்கொண்டு இன்னும் கவனம் செலுத்த முயன்றான்.

'மீண்டும் நினைவில் வருகிறதா?' என்று சோடி கேட்டாள்.

'ஆம். நான் ஒரு வங்காளப் புலி என்பதையும், நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் மறந்துவிட்டேன். அதனால், அது முழுவதும் மறந்து போகும் முன் அதை நினைவில் வைத்துக் கொள்ள  முயற்சிக்கிறேன். இப்போது உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால்...'

மீண்டும் ஒருமுறை அஹர்சி கண்களை மூடிக்கொண்டு அவன ஊரில் பார்த்த அனைத்தையும் கற்பனை செய்ய முயன்றான்.

'உன் கண்களை மூடிக்கொண்டால் வெகு தூரம் செல்ல முடியாது' என்று சோடி சொன்னாள்.

அஹர்சி கண்களை அகலத் திறந்து எரிச்சலுடன் பார்த்தான். ‘நீ என்னைத் தனியாக யோசிக்கவிடும் வரை என்னால் எங்கும் செல்ல முடியாது’ என்று சொன்னான். ‘எப்படியும் உனக்குப் புரியாது. நீ ஒரு புலி இல்லை. ஒரு வங்காளப் புலிக்கு தான் புரியும். நீ ஒரு சிறுத்தை!’

‘முட்டாள் மிருகமே’ என்று சோடி சிரித்தபடி சொன்னா. ‘அங்கே பார்!’ அவள் கடினமான தரையில் பளபளப்பான பனிக்கட்டியை சுட்டிக்காட்டினாள்.

அஹர்சி குழப்பத்துடன் சோடியைப் பார்த்தான். ‘நீ கொஞ்சம் முட்டாளாகிவிட்டாய் என்று நினைக்கிறேன் சோடி’ என்று அவன் சொன்னான். அப்போது தான், அவன் தனக்குள்ளே சிரிக்க விரும்பினான்.

சோடி அன்பான குரலில் சொன்னது, ‘புலியாக எப்படி இருக்க வேண்டும் என்று நீ நினைவில் கொள்ள விரும்பினால், அங்கே பார்’ என்றாள்.

‘சரி, நீ என்னைத் தனியாக விட்டுவிட்டால் நான் பார்க்கிறேன்.’

*

அஹர்சி அவனுடைய கழுத்தை சிறிது வளைத்து, தரையில் இருந்த கண்ணாடி போன்ற பனிக்கட்டி கண்ணாடியைப் பார்த்தான். சோடி அவன் தோளில் உறுமினாள்.

‘உன்னிடம் அழகான கோடுகள் உள்ளன’  என்றாள். ‘நான் கண்ணாடியில் என் புள்ளிகளைப் பார்ப்பேன். என் மாதிரி புள்ளிகள் வேற யாருக்கும் இல்லை.

என் அம்மாவுக்கும், என் அம்மாவின் அம்மாவுக்கும், என் அம்மாவின் அம்மாவின் அம்மாவுக்கும்... என் கொள்ளுப்பாட்டியின் பாட்டிக்கும் தென்னாப்பிரிக்காவின் புற்களில் சுற்றித் திரிந்த காலத்திலிருந்தே புள்ளிகள் இருந்தன.’

சூரியன் ஒளிரும் சவன்னாவையும், தன் வீட்டின் பசுமையான காடுகளையும் கற்பனை செய்யும் போது, சோடியின் கண்கள் பிரகாசமாகி ஒளிர்வதை அஹர்சி கவனித்தான். ‘நான் என் புள்ளிகளைப் பார்க்கும்போது,’ அவள் தொடர்ந்தாள். ‘எனது முழு வரலாற்றையும் நான் பார்க்கிறேன். என்னிடம் எப்போதும் என் புள்ளிகள் இருக்கும்.’ அவள் அஹர்சியைப் பார்த்து கண் சிமிட்டினாள். ‘எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சிறுத்தை ஒருபோதும் அதன் புள்ளிகளை மாற்றாது’ என்று அவள் சொன்னாள்.

‘ஆனால் உனக்கு எப்போதும் வீட்டைப் பிரிந்த ஏக்கம் அல்லது சோகம் ஏற்படாதா?’ இளம் புலி பலவீனமான குரலில் மெலிதாகக் கேட்டது. ‘இங்கே எல்லாம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.’

‘நாம் அனைவருக்கும் வீட்டைப் பிரிந்த ஏக்கம் இருக்கும்’ என்று சோடி பனிக்கட்டியின் மீது கால் வைத்து பதில் சொன்னாள். ‘ஆனால், இங்கே நம் பிரதிபலிப்புகளைப் பார். நாம் அவ்வளவு வித்தியாசமாக இல்லை. நீ வங்காளத்தைச் சேர்ந்தவன். நான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன். ஆனால், நமக்கு ஒரே மாதிரியான மீசைகள் உள்ளதைப் பார். இதோ பார்…’ சோடி தனது கூர்மையான நகங்களால் பனிக்கட்டியில் ஒரு கோடு போட்டு, அதை மேலே உயர்த்தி மங்கலான வெளிச்சத்தில் காட்டினாள். அது பிரகாசித்தது. ‘நம் இருவருக்கும் அவை உள்ளன’ என்று அவள் சிரித்தாள்.

அப்போது, மிருகக்காட்சிசாலையின் கிழக்கு மூலையில் உள்ள யானைகளின் கூண்டிலிருந்து ஒரு பெரிய எக்காள சத்தம் கேட்டது.

‘அது அவ்வளவு ஆச்சரியமாக இல்லை’ என்று அஹர்சி சொன்னான். ‘நாம் இருவரும் பூனைகள். ஆனால், நான் அங்குள்ள யானைகளைப் போல இல்லை, இல்லையா?’

சோடி சிரித்தாள். ‘அவை வித்தியாசமாகத் தோன்றலாம். வித்தியாசமாக சத்தம் போடலாம். ஆனால், யானைகள் கூட வீட்டைப் பற்றி ஏங்குகின்றன என்று நான்உறுதியாகச் சொல்வேன். அது தான் நமக்குள் இருக்கும் பொதுவான ஒன்று.’

யானைகள் மிகவும் பெரியதாகவும் வலிமையானதாகவும் இருப்பதால், சோகமாக இருக்க முடியாது என்று அஹர்சி நினைத்தான். ‘அவை எங்கிருந்து வந்தன என்பதை அவை இன்னும் நினைவில் வைத்திருக்கும் என்று நான் உறுதியாகச் சொல்வேன்’ என்று அவன் சொன்னான். ‘யானை எப்போதும் மறக்காது என்று என் அம்மா என்னிடம் சொன்னார்.’

சோடி கிண்டல் செய்து அந்த கடினமான தரையில் உருண்டு சிரித்தாள். ‘அது உண்மைதான்!’ அவள் ஒப்புக்கொண்டாள். ‘யானை எப்போதும் மறக்காது.’

‘வரிக்குதிரைகள் பயப்படாது என்று நான் உறுதியாச் சொல்வேன்’ அஹர்சி தொடர்ந்தான். இன்னும் கொஞ்சம் கிண்டலுடன் தன் நண்பனின் செயல்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.

‘மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளரின் டிராக்டரிலிருந்து அவை ஓடுவதை நீங்கள் பார்த்ததில்லையா?’ என்று சோடி கேட்டாள்.

‘மற்றும்... முதலைகள்? அவைகளும் பயந்து சோகமாக இருக்குமா?’ அஹர்சி கேட்டான்.

‘அவை தண்ணீருக்கு அடியில் ஒளிந்து  கொள்வதை நீ பார்த்ததில்லையா?’ என்று சோடி தன் தோழியின் மூக்கில் ஒரு விளையாட்டுத்தனமான அடியைக் கொடுத்தபடி சொன்னாள். ‘நாம் அனைவரும் சில சமயங்களில் வீட்டை நினைத்து  ஏங்குவோம், அஹர்சி. அதனால் தான் நாம் அனைவரும் வித்தியாசமாகத் தெரிகிறோம். நாம் நினைவில் கொள்ளும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கிறோம். என்னைப் பார். எனக்கு இந்த அழகான வால் இருக்கிறது. அது மரங்களில் உயரமான இடத்தில் இருந்து கீழே விழாமல் இருப்பதில் சிறுத்தைகள் தான் சிறந்தவர்கள் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது .

அஹர்சி மிகவும் நல்ல மனநிலைக்கு மாறினான். விரைவில் ஆழமாகச் சத்தமிடத் தொடங்கினான். ‘மேலும் உயரமான புல்லில் ஒளிந்து கொள்வதற்காக என் கோடுகள் எப்போதும் எனக்கு உதவியாக இருக்கும். நாங்கள் புலிகள் வங்காளத்தின் சிறந்த வேட்டைக்காரர்கள்’ என்றான்.

‘உன் கோடுகள் நீ எங்கு சென்றாலும் உன்னுடன் வரும், அஹர்சி’ என்று சோடி புன்னகையுடன் கூறினாள்.

‘யானைகள் சோகமாக இருக்கும் போது, அவை அவற்றின் தும்பிக்கைகளைப் பார்த்து, அவை தண்ணீரில் தெறிப்பதில் சிறந்தவை என்பதை நினைவில் கொள்ளும்’ என்று அஹர்சி கூறினான். ‘முதலைகள் சோகமாகவோ அல்லது பயமாகவோ உணரும்போது, அவை அவற்றின் வலைப்பின்னல் கால்களைப் பார்த்து, அவை ஆற்றில் வேகமானவை என்பதை நினைவில் கொள்ளும்…’

இளம் புலி கொஞ்சம் விலகிச் சென்றது. அதன் கண்கள் கனமாகி, கவனிக்காமல் கொட்டாவி விட்டது . இப்போது மாலையாகிவிட்டது. மிருகக்காட்சிசாலை நிறைய விலங்குகளின் கூக்குரல்களால் உயிர்ப்புடன் இருந்தது. சிலது கோடுகள் கொண்டவை. சிலது புள்ளிகள் கொண்டவை. அவற்றில் எதுவும் மற்றொன்றைப் போலவே இல்லை. இரவு வந்தது. ஒரு மில்லியன் நட்சத்திரங்கள் வானத்தை நிரப்பியபோது, எல்லா விலங்குகளும் வித்தியாசமாக இருந்தாலும், அவை அனைத்தும் சில சமயங்களில் ஒரே மாதிரியாக உணரப்படுவதை அஹர்சி புரிந்துகொள்ளத் தொடங்கினான். அப்போதுதான், அவன் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டான் என்பதை அவன் புரிந்து கொண்டான். அப்போது தான், அவன் எப்போதும் அவனது வீட்டின் நினைவுகளை அவனது இதயத்தில் மறக்காமல் நினைத்துக் கொண்டே இருப்பான் என்று அவன் புரிந்து கொண்டான்.

Enjoyed this story?
Find out more here