KidsOut World Stories

யானைகளால் ஏன் பறக்க முடியாது? Becky Walker    
Previous page
Next page

யானைகளால் ஏன் பறக்க முடியாது?

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

யானைகளால் ஏன் பறக்க முடியாது?

ஒரு ஹிந்தி கதை

 

 

 

 

 

*

முன்னொரு காலத்தில், பெரும்பாலான மக்களின் நினைவில் இல்லாத முன்னொரு காலத்தில் யானைகளால் பறக்க முடியும்! அவைகளுக்கு நான்கு பெரிய இறக்கைகள் இருந்தன. அதன் மூலம் வானத்தில் மிக வேகமாகப்  பறந்து சென்றது. மற்ற விலங்குகள் இதனை அதிசயமாகப் பார்த்தன. ஆனால் இந்த பெரிய மிருகங்களும் சில சமயம் முட்டாள்தனமாகவும் இருந்தன. ஆனால், மற்ற விலங்குகள் இதைப்பற்றிப்   பேசாமல் அமைதியாகவே இருந்தன.

ஏனென்றால், யானைகள் மிகவும் பலசாலியாகவும் வேகமாகவும் இருந்தன. இறைவன் அவற்றின் உதவியை பெற வேண்டும் என்றும் முடிவு செய்தார். அவர் இந்த பெரிய மிருகங்களின் மேல் ஏறி சவாரி செய்வார். அவற்றின் உதவியுடன் இந்த உலகத்தை அவரால் முழுமையாக்க முடியும். ஒரு நொடியில் அவர் சீனாவில் இருப்பார். அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் அவரால் ஐஸ்லாந்திற்குச் செல்ல முடியும். இந்த யானைகள் மிகவும் வலிமையானவை. அவை மலைகள் மற்றும் பனிப்பாறைகளை தள்ளி தள்ளி, உலகில் உள்ள அனைத்தும் சரியானதாக மாறும் வரை அவற்றை நகர்த்தின. உதாரணமாக, இமயமலையை இந்தியாவில் வைக்க கடவுளுக்கு உதவினார்கள் - தான்சானியாவில், அவர்கள் கிளிமஞ்சாரோ மலையை வைத்தார்கள்.

இந்த யானைகளின் மீது சவாரி செய்து, இறைவன் இந்த முழு உலகத்தையும் வரிசைப்படுத்தி, அதை முழுமையானதாக மாற்றினார்.

இறைவன் யானைகளிடம், இந்தப் பெரிய வேலை முடிந்ததும் உங்களுக்கு நிரந்தர விடுமுறை என்று சொன்னார். அதாவது, அவர் அவர்களுக்கு வேறு வேலை கொடுக்கும் வரை.

இப்போது, யானைகளுக்கு நிறைய வேலை இல்லை. பிறகு, என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? யானைகள் சும்மா இருந்தன. பழைய நாட்களை பற்றிப் பேசி நேரத்தைக் கடத்தின. அவை எவ்வளவு பலசாலியாக இருந்தன என்று பேசின. அவை எவ்வளவு வேகமாக இருந்தன என்று பேசின. இறைவன் அவைகளுக்கு எப்படி உதவினார் என்று பேசின. அவை அதிகமாக பேசப் பேச, பூமியில் உள்ள மற்ற விலங்குகளை விட அவை தான் மிகச் சிறந்தவை என்று நினைக்கத் தொடங்கின.

அவை நிச்சயமாக மிக முக்கியமானவை தான்!

யானைகள் தங்களுக்குள் சோம்பேறியாக பேசிக் கொண்டன. ‘அந்த மயிலைப் பார்’, இரக்கம் இல்லாமல் பேசின. ‘நம் இறக்கைகளை ஒப்பிடும் போது, மயிலின் சிறிய இறக்கைகள் எவ்வளவு அசிங்கமாகப் பழுப்பு நிறத்தில் உள்ளன.’ மேலும், அந்த சிறிய மயில் தங்கள் மோசமான வார்த்தைகளைக் கேட்கும் வகையில் அவை எப்போதும் தங்கள் குரல்களை உயர்த்திப் பேசும்.

மனதளவில் மிகவும் பணிவான, அன்பான அந்த பாவப்பட்ட மயிலால் யானைகளிடம் மறுத்துப் பேச முடியவில்லை. ‘யானை சொல்வது சரி தான். நான் சிறியவன். என்னுடைய இறக்கைகள் தேவதை இறக்கைகள் போல அழகாக இல்லை. நானும் யானைகள் போல பலசாலி இல்லை’ என்று மயில் நினைத்தது.

நேரம் செல்ல செல்ல, யானைகள் தங்களைத் தாங்களே பெருமையாக நினைக்கத் தொடங்கின. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கத் தொடங்கினர். பேராசை கொண்ட யானைகள் வாழை மரத்திலிருந்து அனைத்து வாழைப்பழங்களையும் எடுத்துக் கொண்டு மற்ற விலங்குகளுக்கு எதையும் விட்டு வைக்காது. மற்ற விலங்குகள் சாப்பிட ஒரு வாழைப்பழம் கூட கிடைக்காததால் சோகமாக இருந்தன. யானைகள் தங்கள் தும்பிக்கையில் இந்த வாழைப்பழங்களை வைத்து என்ன செய்தன தெரியுமா?

யானைகள் அவற்றுக்கு பிடித்த ஒரு கிராமத்திற்குச் சென்று, அதனுடைய இறக்கைகளை கம்பளம் போல விரித்து, சுற்றுலா சென்றது போல அமர்ந்திருக்கும். யானைகளின் எடையால் முழு கிராமமும் நசுங்கியது. வீடுகள் தரைமட்டமாகி, வயல்கள் பாழாகி, கிராம மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

ஏழை கிராம மக்கள் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதால் மிகவும் கோபமடைந்தனர். மேலும், வெறும் வயிற்றுடன் இருக்கும் விலங்குகளும் மிகவும் கோபமாக இருந்தன. எனவே, இறைவன் இது போதும் என்று முடிவு செய்தார். பெருமை மற்றும் பேராசை கொண்ட யானைகள் அவற்றின் தும்பிக்கையை வைத்து மிகப் பெரிய சேதங்களை செய்துவிட்டன. இப்போது, அவற்றுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

இறைவன் அனைத்து யானைகளையும் பேசுவதற்கு அழைத்தார். அவர் அவர்களிடம், 'ஓ வலிமைமிக்க யானைகளே, நான் சொல்வதைக் கேளுங்கள். உலகத்தை முழுமையாக்க எனக்கு உதவியதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனவே, நான் ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். யானைகளுக்கு மட்டும்’ என்று சொன்னார்.

அனைத்து யானைகளும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. ஒரு யானை இன்னொரு யானையிடம், 'இங்கு பார்! நாம் எவ்வளவு வலிமையானவர்கள், தைரியமானவர்கள், நாம் இறைவனுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறோம் என்பது இறைவனுக்குக்  கூட தெரிகிறது. அவர் நமக்காக மட்டும் ஒரு விருந்து வைப்பது சரி தான்!'

எனவே, பேராசை கொண்ட யானைகள், பெருமையுடனும் நம்பிக்கையுடனும், ஒவ்வொன்றாக விருந்துக்கு வந்தன. இறைவன் சொன்னபடி, சிறந்த உணவைக் கண்டுபிடித்தார். மலை அளவு உணவுகள் இருந்தன. பிரகாசமான மஞ்சள் வாழைப்பழங்கள், அடர் சிவப்பு மாதுளைகள், கசப்பான கொய்யாக்கள், சாறுள்ள மாம்பழங்கள்... உங்களால் கற்பனை செய்யக்கூடிய பழங்கள் அனைத்தும் அங்கே இருந்தன.

பேராசை கொண்ட யானைகள் மகிழ்ச்சியடைந்தன. அவை அனைத்தையும் சாப்பிட்டன. கடைசி வரை ஒன்று விடாமல் சாப்பிட்டன.

அனைத்தையும் சாப்பிட்ட பின், யானைகளின் வயிறு மிகவும் நிரம்பியிருந்ததால், வாழைப்பழத் தோல்கள் மற்றும் மாம்பழத் தோல்களுக்கு நடுவில் ஒவ்வொன்றாக தூங்கிவிட்டன. இறைவன் காத்திருந்த தருணம் இது. கடைசி யானை கண்களை மூடியவுடன், இறைவன் ஒரு மிகப் பெரிய கத்தியை எடுத்தார். அமைதியாக, அவர் ஒவ்வொரு யானையிடமும் சென்று அவற்றின் இறக்கைகளை வெட்டினார். பிறகு, அவர் இந்த அழகான இறக்கைகளை சிறிய மயில்களுக்குக் கொடுத்தார். சிறிய மயில்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததால், அவை பாடவும், நடனம் ஆடவும் காட்டுக்குள் ஓடின.

மயில்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறீர்களா, மயில்கள் ஆடுவதை, மயில்கள் ஆடுவதை? / மரங்களைச் சுற்றி மயில்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம். மயில்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். மயில்கள் ஆடுவதை, மயில்கள் ஆடுவதை. / ஆம். மரங்களைச் சுற்றி மயில்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறேன்.

*

இப்போது யானைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

யானைகள் தங்கள் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தபோது, அழகான மயில் அவைகள் மீது ஈர்க்கக்கூடிய இறகுகளை வீசுவதைப் பார்த்து அவை அதிர்ச்சியடைந்தன. அவை கடும் கோபத்தில் இருந்தன. ஆனால் இறைவனுக்கு அவற்றின் புகார்களைக் கேட்க நேரம் இல்லை. அதற்கு பதிலாக அவர், 'யானைகளாகிய நீங்கள் இன்னும் நல்லவர்களாகவும், அன்பானவர்களாகவும் மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் பலத்தைப் பயன்படுத்தி கிராம மக்கள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்ட உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று சொன்னார்.

யானைகள் தாங்கள் செய்ததை நினைத்து மிகவும் வெட்கப்பட்டன. கிராம மக்களுக்கு தங்களால் முடிந்த வரை உதவ வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே, இன்றும் கூட ஒவ்வொரு கிராமத்திலும் வழியில் செல்லும் யானைகள், மக்களைக் கடந்து செல்லும் போது உதவி செய்கின்றன.

Enjoyed this story?
Find out more here