ஹான்சல் மற்றும் கிரெட்டல்
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:
ஒரு காலத்தில், ஒரு ஏழை விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தன் இரண்டு குழந்தைகள் மற்றும் தன் இரண்டாவது மனைவியுடன் காட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அந்தக் குழந்தைகள் ஹான்சல் மற்றும் கிரெட்டல் என்று அழைக்கப்பட்டனர். ஹான்சல் கிரெட்டலின் பெரிய சகோதரர்.
ஒரு நாள், அவர்களிடம் உணவு இல்லை. விறகு வெட்டியின் மனைவி அவரிடம் குழந்தைகளை காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னாள். அவர்கள் முழுவதும் தொலைந்து போக வேண்டும் என்று அவள் விரும்பினாள். பின்னர், அவளுக்கும் விறகு வெட்டுபவருக்கும் சாப்பிட அதிக உணவு கிடைக்கும்.
ஹான்சல் தனது பொல்லாத மாற்றாந்தாய் பேசுவதைக் கேட்டான். அவன் வெளியே சென்று தன் பைகளை சிறிய வெள்ளை கூழாங்கற்களால் நிரப்பினான்.
மறுநாள் விறகு வெட்டி மற்றும் அவரது மனைவி குழந்தைகளை காட்டிற்கு அழைத்துச் சென்றனர். விறகு வெட்டி தனது குழந்தைகளை விட்டுச் செல்வதில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அவருடைய மனைவி அவரை கட்டாயப்படுத்தினார்.
எனவே, ஹான்சலும் கிரெட்டலும் தனியாக விடப்பட்டனர்.
இரவு வந்தது. குளிர் அதிகரித்தது. கிரெட்டல் அழத் தொடங்கினாள்.
"கவலைப்படாதே," என்றான் ஹான்சல். "என் கையைப் பிடித்துக் கொள். நாம் வீட்டிற்கு திரும்பிச் போகலாம்" என்றான்.
அன்று காலை அவர்கள் காட்டுக்குள் நடந்து சென்றபோது, ஹான்சல் வெள்ளைக் கூழாங்கற்களை ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டே சென்றான். அதிர்ஷ்டவசமாக, நிலா பிரகாசமாக இருந்தது. அது வெள்ளைக் கற்களில் பிரகாசித்தது. குழந்தைகள் வீட்டிற்குச் செல்லும் பாதையைத் தொடர்ந்தனர்.
விறகு வெட்டியின் மனைவி குழந்தைகளைப் பார்த்ததும் கோபமடைந்தாள். அவள் தன் கணவரிடம் கத்தி, குழந்தைகளை மீண்டும் காட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களைத் தொலைத்துவிடச் சொன்னாள்.
விறகு வெட்டி வருத்தப்பட்டார். ஆனால், அவர் தனது மனைவியைப் பார்த்து பயந்தார். அவள் சொன்னதைச் செய்ய அவர் ஒப்புக்கொண்டார். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே தள்ளப்பட்டபோது, ஹான்சல் ஒரு ரொட்டித் துண்டை எடுத்தான். அவர்கள் மீண்டும் காட்டுக்குள் நடந்து சென்றபோது, ஹான்சல் ரொட்டித் துண்டுகளைக் கீழே போட்டு வந்தான். வீட்டிற்கு செல்லும் பாதையை மீண்டும் இதன் மூலம் கண்டு கொள்ளலாம் என்று அவன் நம்பினான்.
அவர்கள் காட்டின் நடுப்பகுதியை அடைந்ததும், குழந்தைகளின் தந்தை ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு, அவர் திரும்பி செல்ல வேண்டும் என்று அவர்களிடம் சொன்னார்.
மீண்டும், இரவு வந்தது. இந்த முறை நிலவு இல்லை. குழந்தைகள் ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் ஒன்றாக காலை வரை தூங்கிவிட்டனர்.
மறுநாள் "கவலைப்படாதே," என்றான் ஹான்சல். "நாம் ரொட்டியின் பாதையைப் பின்பற்றி வீட்டிற்குச் செல்வோம்.” என்றான்.
ஆனால் ரொட்டியின் பாதை அங்கு இல்லை. ரொட்டித் துண்டுகளை உண்ணும் பறவைகளைப் பற்றி ஹான்சல் யோசிக்கவில்லை. இந்த முறை குழந்தைகள் உண்மையில் தொலைந்து போயிருந்தனர்.
குழந்தைகள் காட்டில் அலைந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, சில மரங்களின் நடுவில் ஒரு வேடிக்கையான சிறிய வீட்டைக் கண்டார்கள். அது இஞ்சி ரொட்டியால் ஆனது போல் இருந்தது. அதன் மேல் பனிக்கட்டியால் போர்த்தி முடிக்கப்பட்டிருந்தது.
ஹான்சல் சுவரில் இருந்து ஒரு துண்டை உடைத்தான். அவன் அதைச் சாப்பிட்டான். அது சுவையாக இருந்தது! பின்னர் கிரெட்டல் ஜன்னல் ஓரத்திலிருந்து ஒரு துண்டை உடைத்தாள். அது மிகவும் சுவையாக இருந்தது! அவர்கள் மேலும் பிஸ்கட், குக்கீகள் மற்றும் இனிப்புத்
துண்டுகளை உடைத்தனர்.
திடீரென்று, கதவு திறந்தது. ஒரு வயதான பெண் வெளியே வந்தார். அவர் வயதான பெண் அன்பானவர் இல்லை. ஐயோ! அவள் ஒரு சூனியக்காரி!
"இன்னும் சாப்பிடுங்கள்," என்று சூனியக்காரி சொன்னாள். “உள்ளே வாருங்கள்!” என்றாள்.
ஹான்சலும் கிரெட்டலும் சாப்பிட இன்னும் நிறைய கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த சூனியக்காரி ஹான்சலுக்கும் கிரெட்டலுக்கும் நிறைய சாப்பிடக் கொடுத்தாள். அவள் அவர்களுக்கு இன்னும் நிறைய நிறைய சாப்பிடக் கொடுத்தாள். அவள் அவர்களுக்கு மிக மிக அதிகமாக சாப்பிடக் கொடுத்தாள்.
அந்த தீய சூனியக்காரி இரண்டு குழந்தைகளையும் தன் அடுப்பில் சுட்டு சாப்பிடத் திட்டமிட்டாள்.இருந்தாலும், அவர்கள் மெலிதாக இல்லாமல் இருந்தால் மிகவும் சுவையாக இருப்பார்கள் என்று அவள் நினைத்தாள். அவர்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்து, அவர்கள் குண்டாக இருக்கும்போது அவர்களை சமைத்து சாப்பிட விரும்பினாள். பல வாரங்களாக, சூனியக்காரி குழந்தைகளுக்கு தினமும் நிறைய சாப்பாடு கொடுத்தாள்.
கிரெட்டலை வீட்டை சுத்தம் செய்யச் சொன்னாள். ஹான்சலை ஒரு கூண்டில் அடைத்தாள். ஒவ்வொரு இரவும் ஹான்சலின் விரலை அழுத்தி, அவன் எவ்வளவு குண்டாகி வருகிறான் என தெரிந்து கொள்வாள்.
சூனியக்காரிக்கு நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஹான்சலைப் பார்ப்பதற்குப் பதிலாக அவள் அவனது விரலைத் தொட்டுப் பார்க்க விரும்பினாள். இருந்தாலும், ஹான்சல் ஒரு புத்திசாலி. அவன் தனது சட்டைப் பையில் ஒரு பழைய கோழி எலும்பை வைத்திருந்தான். ஒவ்வொரு இரவும், சூனியக்காரி தனது விரலுக்குப் பதிலாக அதை அழுத்தும்படி செய்தான். ஹான்சல் குண்டாக மாறவில்லை என்று சூனியக்காரி கோபமடைந்தாள்.
ஒரு நாள் சூனியக்காரி ஹான்சல் குண்டாகக் காத்திருந்து சோர்ந்து போனாள். அவள் சிறுவனை வறுத்து சுவையான உணவை சாப்பிடுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாள்.
அவள் அடுப்பைத் திறந்து உள்ளே சூடாக இருக்கிறதா என்று பார்த்தாள். சூனியக்காரி குனிந்தபோது, கிரெட்டல் அறையின் குறுக்கே ஓடி அவளை அடுப்புக்குள் தள்ளினான். சிறுமி அடுப்பை மூடினாள். டம்! சூனியக்காரி சிக்கிக்கொண்டாள்.
கிரெட்டல் இஞ்சி ரொட்டி வீட்டைத் தேடினாள். அது கேக்குகள் மற்றும் இனிப்புகளால் நிரம்பியிருந்தது. ஒரு அறையில், தங்கத்தால் நிரப்பப்பட்ட பெட்டிகளைக் கண்டாள். கிரெட்டல் ஹான்சல் அடைக்கப்பட்ட கூண்டின் சாவியைக் கண்டுபிடித்தாள்.
அவள் தன் சகோதரனை விடுவித்தாள். குழந்தைகள் தங்கள் பைகளில் முடிந்த அளவு தங்கத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
இரண்டு நாட்கள், குழந்தைகள் காட்டில் தேடினர். இறுதியாக, அவர்கள் அவர்களுடைய வீட்டைக் கண்டுபிடித்து தங்கள் தந்தையைப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார். மேலும், அவர்களின் மாற்றாந்தாய் போய்விட்டதாகக் கூறினார்.
ஹான்சலும் கிரெட்டலும் வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு, அவர்கள் எப்போதும் பசியுடனோ அல்லது ஏழையாகவோ இருந்ததில்லை.
Enjoyed this story?