நரியும் நாரையும்
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:

நரியும் நாரையும் ஒரு காட்டில் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள், நரி நாரையை சாப்பிட வருமாறு அழைத்தது.
‘திருமதி நாரை அவர்களே, நாளை மதியம் பன்னிரெண்டு மணிக்கு வாருங்கள்’ என்று நரி சொன்னது.
நாரை மிகுந்த மகிழ்ச்சியுடன் மறுநாள் நரியின் குகைக்கு சென்றது.
நரி ஒரு சுவையான குழம்பு பரிமாறியது. அதை ஒரு தட்டையான தட்டில் பரிமாறியது.
‘வாசனை மிகவும் நன்றாக உள்ளது!’ என்று நாரை சொன்னது.
நாரை சாப்பிட முயற்சி செய்த போது, ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாரையின் நீளமான அலகால் சிறிய பகுதியைக் கூட எடுக்க முடியவில்லை. தட்டு மிகவும் தட்டையாக இருந்தது.
‘ஓ! என்ன ஒரு அவமானம்!’ என்று நரி கிண்டல் செய்தது. ‘உனக்காக உன்னுடைய சாப்பாட்டை நான் சாப்பிட வேண்டும்.’
நரி மொத்த குழம்பையும் சாப்பிட்டது.
நாரை வீட்டிற்கு திரும்பியது. அது பசியாக இருந்தது.
ஹ்ம்ம், நரி ஒரு அயோக்கியன். அவனுக்கு பாடம் கற்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று நாரை யோசித்தது.
அது இன்னும் கொஞ்ச நேரம் யோசித்தது. ‘ஆஹா! எனக்கு ஒரு யோசனை’, என்று உற்சாகமாக கத்தியது.
நாரை நரியிடம் சென்று தன்னுடைய வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்தது.
‘நாளை மதியம் வாருங்கள் திரு. நரியாரே’, என்று கூறியது.
பின்பு வீட்டிற்கு சென்று ஒரு சுவையான சூப் தயார் செய்தது.
நரி மிகுவும் மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் நாரையின் வீட்டிற்கு பன்னிரெண்டு மணிக்கு சென்றது.
நீளமான நேரான கழுத்து கொண்ட ஒரு ஜாடியில் சூப் பரிமாறப்பட்டது. நரியால் சூப்பை குடிக்க முடியவில்லை. அது மிகவும் பசியாக இருந்தது.
‘ஓ! என்ன ஒரு அவமானம்!’ நாரை கிண்டல் செய்தது. ‘உனக்காக உன்னுடைய சாப்பாட்டை நான் சாப்பிட வேண்டும்.’
நாரை தன் நீளமான அலகை ஜாடியினுள் விட்டு மொத்த சூப்பையும் குடித்து முடித்தது.
‘பழிக்கு பழி!’ என்று கத்தியது நாரை.
நரி தன்னுடைய வாலைத் தன் கால்களுக்கு நடுவில் வைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பியது.
Enjoyed this story?