மந்திரக் கஞ்சிப் பானை
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:
ஒரு ஏழை சிறுமி தன் அம்மாவுடன் ஒரு ஊரில் வசித்து வந்தாள். அவர்களுக்கு பசித்தது. ஆனால், அவர்களிடம் சாப்பிட எதுவும் இல்லை.
‘நான் காட்டிற்குள் சென்று காளான்கள் மற்றும் பெர்ரி பழங்களைத் தேடி வருகிறேன்’ என்று சிறுமி கூறினாள்.
அவள் அங்கு ஒரு வயதான பெண்ணை சந்தித்தாள். அந்தப் பெண் சிறுமியிடம் ஒரு பானையை கொடுத்து, ‘இந்த பானையை எடுத்துச் செல். ‘பானையே, சமை!’ என்று பானையிடம்சொன்னால், அது உனக்கு ருசியான கஞ்சி சமைத்துத் தரும். ‘பானையே, நிறுத்து!’ என்றுசொன்னால், அது சமைப்பதை நிறுத்திவிடும்’.
‘நன்றி, மிக்க நன்றி’ என்று சிறுமி கூறிவிட்டு, அந்த பரிசுடன் தன் வீட்டிற்குத் திரும்பினாள்.
வீட்டில் அந்த சிறுமி, ‘பானையே, சமை!’ என்று சொன்னாள்.
கஞ்சி இனிப்பாகவும் ருசியாகவும் இருந்தது. கடைசியில், அம்மாவுக்கும் மகளுக்கும் வயிறு நிரம்பியது.
‘பானையே, நிறுத்து!’ என்று சிறுமி சொன்னாள். அந்த பானை கஞ்சி தருவதை நிறுத்தியது.
ஒரு நாள் அந்த சிறுமி நண்பர்களைப் பார்க்கச் சென்றாள். பின்னர், அவளுடைய அம்மாவிற்குப் பசித்ததால், ‘பானையே, சமை!’ என்று அவர் கூறினார்.
அம்மா சாப்பிட்டாள். ஆனால், போதுமான கஞ்சியைச் சாப்பிட்ட பிறகு, பானையை நிறுத்துவதற்கான சரியான வார்த்தையை மறந்து விட்டார்.
பானை சமைத்தது … சமைத்தது ... சமைத்துக் கொண்டே இருந்தது. விரைவில் சமையல் அறை முழுவதும் கஞ்சியால் நிரம்பியது. விரைவில் வீடு முழுவதும் கஞ்சியால் நிரம்பியது. தெருக்கள் மற்றும் பக்கத்து வீடுகள் முழுவதும் கஞ்சியால் நிரம்பியது.
கடைசியாக, அந்த சிறுமி வீட்டிற்குத் திரும்பி வந்தாள்.
‘பானையே, நிறுத்து!’ என்று சிறுமி கத்தினாள்.
அந்தப் பானை கஞ்சி சமைப்பதை நிறுத்தியது. ஆனால், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்வதற்கு நிறைய கஞ்சியை சாப்பிட வேண்டி இருந்தது.
Enjoyed this story?